ரஜினி - லோகேஷ் படத்தில் 15 முன்னணி நடிகர்கள்.. பிரம்மாண்டத்தின் உச்சமாக உருவாகும் தலைவர் 171…

நடிகர் ரஜினிகாந்த், விரைவில் சினிமாவிலிருந்து விலக போவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். மேலும் அரவது கடைசி படம் லோகேஷ் கனகராஜுடன் தான் என்றும் கூறப்படுகிறது. ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
ஆனால் லியோ படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் தலைவர் 171தான் எடுக்கப்போகிறார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு இந்த படம் குறித்து பல தகவல்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில், ரஜனிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. கூடிய விரைவில் இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
இந்த படம் மிக பிரம்மாண்டமாக இருக்கும். ரஜினி சினிமாவிலிருந்து விலக முடிவெடுத்துவிட்டால், ஒருவேளை இந்த படம் தாம் ரஜினியின் கடைசி படம் என்றால், தமிழ் சினிமாவிலிருந்து மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இருக்கும் 15 முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடிக்க வாய்ப்புள்ளது. பொதுவாகவே லோகேஷ் கனகராஜ் படத்தில், அதிகமான நடிகர்கள் நடிப்பது வழக்கம் தான்.
இந்த படத்தில் இன்னும் அதிகமாக இருப்பார்கள். பல ஹீரோக்கள் போட்டிப் போட்டுக்கொண்டு இந்த படத்தில் நடிக்க வருவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ரஜினி இது தான் கடைசி படம் என்று முடிவெடுத்துவிட்டதாக வெளியாகும் தகவல் உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க 99% வாய்ப்புள்ளது. இந்த படம் அதிக பொருட்செலவில் உருவாகும் என்றும் கூறப்படுகிறது என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.