Connect with us
banner

150 கோடியை தூக்கி எறிந்த நெட்ப்ளிக்ஸ்.! கடுப்பான ‘பாகுபலி’ படக்குழு.!

Cinema News

150 கோடியை தூக்கி எறிந்த நெட்ப்ளிக்ஸ்.! கடுப்பான ‘பாகுபலி’ படக்குழு.!

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், அனுஸ்கா, நாசர் என பலர் நடித்து பிரமாண்டமாக வெளியாகி பிரமாண்ட வெற்றியடைந்த திரைப்படம் பாகுபலி. இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்த சிவகாமி கதாபாத்திரம் தான் மையக்கரு.

அந்த கதாபாத்திரத்தை மையப்படுத்தி தான் கதை எழுதப்பட்டது. இதனை புரிந்துகொண்ட நெட்ப்ளிக்ஸ் OTT நிறுவனம் , சிவகாமி கதாபாத்திரத்தை மையப்படுத்தி ஒரு வெப் சீரிஸ் தயாரித்து அதனை நெட்ப்ளிக்ஸ் தளத்திலேயே நேரடியாக வெளியிட திட்டமிட்டது.

இதற்காக ராஜமௌலியிடம் கேட்கப்பட்ட போது, அவர் தன்னுடைய அசோசியேட் இயக்குனரை அனுப்பிவைத்துள்ளார். மேலும் தான் மேற்பார்வை செய்து கொள்கிறேன் என உத்தரவாதம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்களேன் – எல்லா பக்கமும் அடி.! நம்ம பழைய தொழிலுக்கே போயிடுவோம்.! அதிரடி முடிவில் PD.!

இதனை அடுத்து, 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பாகுபலி சிவகாமி கதாபாத்திர சீரிஸ் தயாரானது. ஆனால், அது நெட்ப்ளிக்ஸ் நினைத்தபடி தயாராகவில்லை. இதனால் கடுப்பான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அதனை வெளியிட்டால் நமது பெயர் கெட்டுவிடும். அதனால், வெளியிட வேண்டாம் என முடிவு செய்து, தூக்கி ஓரம்கட்டி வைத்துவிட்டனர்.

அதனால், அதில் நடித்த வேலை பார்த்த அனைத்து டெக்னீஷியன்களும் கடுப்பாகியுள்ளனர். இது வெளியாகி இருந்தால் நமக்கும் பெயர் கிடைத்திருக்கும் என நினைத்திருந்தனர். ஆனால், தற்போது அனைத்தும் வீணாய் போகியுள்ளது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top