16 வயதினிலே பற்றி பலருக்கும் தெரியாத பல ரகசியங்கள்…பகிர்ந்த பாரதிராஜா….

Published on: September 26, 2022
16 vayathinile
---Advertisement---

தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிய படங்களுள் முக்கியமானது இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படம். அதேபோல், அதுவரை கிராமங்களை நோக்கி திரும்பாத தமிழ் சினிமாவின் கவனம் இந்தப் படத்துக்குப் பிறகு திரும்பியது என்றே சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு 16 வயதினிலே படத்துக்குப் பிறகு நிறைய கிராமத்துப் படங்கள் வரத் தொடங்கின. இந்த படத்துக்கு இன்னொரு சிறப்பு சூப்பர் ஸ்டார் ரஜினியும் உலக நாயகன் கமலும் இணைந்து கலக்கிய படம்.

பாரதிராஜா

பாரதிராஜா இயக்கத்தில் 1977-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி ரிலீஸான இந்தப் படத்துக்கு படக்குழு முதலில் மயிலு என்கிற பெயரைத்தான் வைக்க நினைத்திருந்தார்களாம். அதேபோல், தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் படத்தைத் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், ஒரு சில காரணங்களால் அவர்கள் பின்வாங்கவே, இளம் இயக்குநர் பாரதிராஜாவின் படத்தைத் தயாரிக்க ராஜாக்கண்ணு முன்வந்திருக்கிறார்.

பாரதிராஜா

அதேபோல், பரிசோதனை முயற்சி என படத்தை மீடியாக்கள் அடையாளப்படுத்தவே, படத்தை வாங்க எந்தவொரு விநியோகஸ்தர்களும் முன்வரவில்லை. இதனால், தயாரிப்பாளரான ராஜாக்கண்ணுவே படத்தை வெளியிட்டார். மற்றவர்களின் கணிப்பைப் பொய்யாக்கி தமிழகம் முழுவதும் பல திரையரங்குகளில் 175 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வெற்றியை 16 வயதினிலே பதிவு செய்தது. அதேபோல், கமல், ஸ்ரீதேவி, ரஜினி, காந்திமதி என நடிகர்களுக்கும் சரி; இயக்குநர் பாரதிராஜாவுக்கும் சரி ஒரு அடையாளமாகவே படம் மாறிப்போனது.

16 vayathinile

இதையும் படிங்க: பொட்டி நிறைய பணம்…கால்ஷீட் கொடுங்க!…ரஜினியை கடுப்பேத்திய தயாரிப்பாளர்…

16 வயதினிலே படம் எடுக்கும் போதே கமல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்திருந்தார். ஆனால், ரஜினியின் நிலை அப்படியில்லை. அவர் அப்போதுதான் வளர்ந்து வரும் நடிகர். இதனால், ஷூட்டிங்கின்போது கமல், ரஜினி இருவருக்கும் கொடுக்கப்பட்ட வசதிகள் வெவ்வேறு என்று நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நடிகர் கமலுக்கு இளநீர், கூல்ட்ரிங்ஸ் என கவனிப்பு பலமாக இருக்குமாம். அதேநேரம், ஷூட்டிங்கில் ஷாட் நேரம் தவிர மற்ற நேரங்களில் ரஜினியைக் கண்டுகொள்ள கூட ஆள் இருக்க மாட்டார்களாம்.

படத்தின் மொத்த பட்ஜெட் 5 லட்ச ரூபாய். அந்த காலத்தில் 28 ரோல்களைக் கொண்டு படமாக்கியிருக்கிறார்கள். படம் ரிலீஸான பிறகு சப்பாணி கேரக்டரும் பரட்டை கேரக்டரும் சரி மயிலு கேரக்டரும் சரி தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத கேரக்டர்களாக வரலாற்றில் பதிவாகிவிட்டன.

kamal

இந்தப் படத்தில் நடிக்க ரஜினி 3,000 ரூபாய் சம்பளம் கேட்டாராம். ஆனால், 500 ரூபாய் குறைவாக இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய்தான் சம்பளம் கொடுக்கப்பட்டதாம். அதேநேரம், அப்போதே முன்னணி நடிகராக இருந்த கமல்ஹாசனுக்குக் கொடுக்கப்பட்ட சம்பளம் 27,000 ரூபாயாம். 16 வயதினிலே படத்தின் டிஜிட்டல் வெர்ஷன் ரிலீஸ் செய்யப்பட்ட நிகழ்ச்சியில் இந்தத் தகவலை படத்தின் இயக்குநர் பாரதிராஜாவே பகிர்ந்திருந்தார்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.