Cinema News
‘16 வயதினிலே’ பட தயாரிப்பாளர் எஸ்.பி.பி.யா? பாரதிராஜா கொடுத்த ஷாக்
எல்லாரும் ஆசைப்படுகிற மாதிரி இல்லை பாரதிராஜாவும் சினிமாவில் ஒரு நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் தான் வந்திருக்கிறார். அதுவும் சிறுவயதில் சிவாஜியின் படங்களை பார்த்து பார்த்து அவரின் தமிழில் மிகவும் ஈர்க்கப்பட்டு சிவாஜிக்கு டஃப் கொடுக்கும் நடிகனாக மாற வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் தான் சினிமாவிற்குள் வந்தாராம் பாரதிராஜா.
ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டு சாப்பாட்டிற்கு வழியில்லாமல் இருந்த பாரதிராஜாவிற்கு துணையாக இருந்தவர் இளையராஜா அவர் சொந்த ஊரிலிருந்து சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஒரு ஆசையில் தான் சென்னைக்கு வந்திருக்கிறார். இளையராஜா கங்கை அமரன் அவருடைய சகோதரர் பாஸ்கர் ஆகிய மூவரும் நாடகங்களில் கச்சேரிகள் நடத்தி அதன் மூலம் கிடைத்த காசை வைத்து தான் பாரதிராஜாவிற்கும் உதவி செய்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க : ஏடாகூடமான கேள்வியை கேட்ட நிருபர்!.. எம்.ஆர்.ராதா சொன்ன பதில் என்ன தெரியுமா?…
இதற்கிடையில் இளையராஜாவிற்கு முன்பே எஸ் பி பாலசுப்ரமணியத்திடம் மிகவும் நெருக்கம் கொண்டவராக இருந்திருக்கிறார் பாரதிராஜா. இவர்தான் இளையராஜாவை எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். ஆயிரம் நிலவே வா என்ற பாடல் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி கொண்டிருந்தாராம் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
அந்த சமயத்தில் தான் அவர் ஒரு புதிய காரை ஒன்று வாங்கி இருந்தாராம். இவர் ஸ்டூடியோவிற்கு பாடப் போகும்போதெல்லாம் அந்த காரில் பாரதிராஜாவை பேச்சுத் துணைக்காக ஏற்றிக்கொண்டு போவாராம். அப்படி ஒரு சமயத்தில் தான் பாரதிராஜா எஸ் பி பாலசுப்ரமணியத்திடம் 16 வயதினிலே மற்றும் சிகப்பு ரோஜாக்கள் படத்தில் கதையை சொல்லி இருக்கிறார்.
இதையும் படிங்க : அத சொல்ல முடியல!.. ஓட்டுக்கு பணம் வாங்கதன்னு நீ சொல்றியா?.. விஜயை விளாசிய ராஜன்…
அதில் 16 வயதினிலே படத்தின் கதை தான் எஸ்பி பாலசுப்பிரமணியத்திற்கு மிகவும் பிடித்து போய் இருந்ததாம் மேலும் பாரதிராஜா நான் ஒரு இயக்குனராக வேண்டும்.ஆனால் பணம் இல்லாமல் என்ன செய்வது என்று எஸ்பிபியிடம் கூறினாராம். அப்போது பிரசாத் ஸ்டூடியோவிற்கு பாட சென்ற போது அங்குள்ள ஒருவரிடம் 5000 ரூபாயை வாங்கி பாரதிராஜாவிடம் கொடுத்தாராம் எஸ்பிபி.
இதை வைத்துக்கொண்டு அந்த பதினாறு வயதினிலே படத்தை எடு என்று எஸ்பிபி சொன்னாராம். உடனே பாரதிராஜா எஸ்பிபி யின் மகள் பெயரிலேயே ஒரு புரொடக்ஷனை ஆரம்பித்து 16 வயதினிலே படத்தின் கதையை எடுக்கலாம் என முடிவு செய்தாராம். அதுதான் பல்லவி புரொடக்ஷன் என்ற நிறுவனம். ஆனால் அதன் பிறகு எஸ்பிபி யால் பணம் கொடுக்க முடியவில்லையாம்.
இதையும் படிங்க : ரஜினிக்கும் முத்துராமனுக்கும் அப்படி என்னதான் பிரச்சினை? கடைசி வரை அது நடக்கவே இல்லை
அதன் பிறகு தான் இந்த படத்தை எடுக்க ராஜ்கன்னு தாமாகவே முன்வந்து படத்தை எடுத்து தயாரித்தாராம். இந்த விஷயம் இதுவரை யாருக்கும் தெரியாது. இப்போது சொல்கிறேன் என்று பாரதிராஜா இந்த ஒரு ரகசியத்தை ஒரு பேட்டியின் மூலம் பகிர்ந்தார்.