1987ல் கடும் போட்டி... விஜயகாந்த், கமல், ரஜினி யாருக்கு வெற்றி?
1987ல் வெளியான படங்களில் கமல், ரஜினி, விஜயகாந்த் படங்கள் வெளியாகின. இவற்றில் எது முதலில் உள்ளன என்று பார்ப்போம்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம் தான் மனிதன். இது அக்டோபர் 21ம் தேதி ரிலீஸ் ஆனது. எஸ்.பி.முத்துராமன் இயக்கி இருந்தார். சந்திரபோஸ் இசை அமைத்துள்ளார். ரஜினியுடன் இணைந்து ரூபினி, ரகுவரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க... கமலின் மருதநாயகம் கனவு நிறைவேறுகிறதா? புதிய தொழில்நுட்பம் கைகொடுக்குமா?
ஏவிஎம் தயாரிப்பில் இந்தப் படம் வெளியானது. பாக்ஸ் ஆபீஸில் இன்டஸ்டரியல் ஹிட் கொடுத்த படம் இது. பாடல், பைட் எல்லாமே சூப்பர். இது பல திரையரங்குகளில் வெள்ளிவிழா கண்டது. காளை காளை முரட்டுக்காளை, மனிதன் மனிதன் ஆகிய பாடல்கள் செம மாஸ்.
அதே அக்டோபர் 21ல் வெளியான படம் கமல் நடித்த நாயகன். மணிரத்னம் இயக்கியுள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார். கமலுடன் சரண்யா, பொன்வண்ணன், ஜனகராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். பாம்பே தாதாவை மையமாக வைத்து சென்னையில் எடுக்கப்பட்ட படம். பாடல்கள், ஆக்ஷன் காட்சிகள் எல்லாமே சூப்பர்.
பல திரையரங்குகளில் 200 நாள்களும், பாம்பேயில் வெள்ளிவிழாவும் கண்டது. இன்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்து வசூலைக் குவித்தது. கமல் மாறுபட்ட இரு வேடங்களில் நடித்து இருப்பார். அதே போல இந்தப் படத்தில் நிலா அது, நீ சிரித்தால், அந்தி மழை நேரம் ஆகிய பாடல்கள் மாஸாக இருக்கும்.
அக்டோபர் 19ல் வெளியான படம் உழவன் மகன். விஜயகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த படம். மனோஜ்கியான் இசை அமைத்துள்ளார். கதை எழுதியவர் ஆபாவாணன். அரவிந்தராஜ் இயக்கியுள்ளார. விஜயகாந்த் உடன் ராதா, ராதிகா, நம்பியார், செந்தில் உள்பட பலர் நடித்துள்ளளார். பாடல்கள் எல்லாமே சூப்பர். செம்மறி ஆடே பாடல் நச் ரகம். முதல் அரை மணி நேரம் ரேக்ளா ரேஸ் அபாரமாக இருந்தது.
கிளைமாக்ஸ் காட்சியும் மாஸாக இருந்தது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. நல்ல வசூலை வாரிக்குவித்தது. பாக்ஸ் ஆபீஸிலும் பட்டையைக் கிளப்பியது. மதுரை திரையரங்குகளில் வெள்ளிவிழா கண்டது. தெலுங்கு, கன்னடம் உள்பட பல மொழிகளில் 100 நாள்களைக் கடந்து ஓடியது. எம்ஜிஆரே பாராட்டிய படம் இதுதான்.
இந்த 3 படங்களில் மனிதன் இன்டஸ்ட்ரியல் ஹிட். நாயகனும் ஹிட். ஆனால் அதற்கு கொஞ்சமும் சளைக்காமல் உழவன் மகன் பெரும் வெற்றியைப் பெற்றது. நாயகன், மனிதனை விட உழவன் மகன் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது என்று இயக்குனர் அரவிந்தராஜ் ஒரு பேட்டியில் சொன்னாராம