Cinema History
திருடு போன 2 லட்ச ரூபாய்!.. அப்போது விஜயகாந்த் கொடுத்த ரியாக்ஷன்தான் ஹைலைட்..!
விஜயகாந்த் நடிப்பில் வெளியான படம் காந்தி பிறந்த மண். 1995ல் ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் வெளியானது. விஜயகாந்த், ரவளி, ரேவதி, ராதாரவி உள்பட பலர் நடித்துள்ளனர். தேவா இசை அமைத்துள்ளார். பாடல்கள் செம மாஸ். இந்தப் படத்தின்போது நடந்த ஒரு சுவையான சம்பவத்தை தயாரிப்பாளர் சுப்பையா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஓகேனக்கல்ல பாடலுக்கு சூட்டிங் எடுக்கணும். தமிழ்நாடு ஓட்டல்ல தங்கியிருந்தேன். நான் குளிச்சிட்டு சாவியைப் பூட்டிட்டு ரிசப்ஷன்ல கொடுத்துட்டுப் போயிருவேன். கிளீன் பண்றவங்க சாவி வேணும்னு கேட்டு எடுத்துட்டாங்க. கிளீன் பண்றேன் கிளீன் பண்றேன்னு ரூபாயை எடுத்துட்டாங்க. மறுநாள் ஊட்டி சூட்டிங் முடிச்சிட்டு சாயங்காலம் வந்து கணக்கு ஒப்படைக்கணுமேன்னு பார்க்குறேன்… 2 லட்சத்துக்கு மேல குறையுது.
எனக்கு ஒண்ணமே புரியல. எப்படிப் போச்சு? எனக்கு அங்கே ஒண்ணுமே வேலை இல்ல. ரூம்ல இருக்கேன். ஆர்ட் டைரக்டருக்கு என்னென்ன வேணுமோ வாங்கிக் கொடுத்துட்டு குளிக்கப் போயிடுவேன். மறுநாள் காலைல விஜயகாந்த் வந்துட்டாரு. எல்லாத்தையும் எடுத்துட்டுப் போடாங்கறாரு. நான் தலையைச் சொரிஞ்சிக்கிட்டே நின்னுக்கிட்டுருக்கேன்.
என்னடாங்கறாரு. இல்ல காசு கொஞ்சம் குறையுதுன்னு சொன்னேன். எவ்வளவு குறையுதுன்னாரு. ரெண்டு ரூபா (2 லட்சம்) ன்னு சொன்னேன். சரி. சாவியை எங்கே வச்சிருந்தேன்னாரு. ரிசப்ஷன்ல தான் கொடுத்துட்டுப் போனேன்னு சொன்னேன். ரிசப்ஷன்ல கொடுத்துட்டுப் போனேல்ல. க்ளீன் பண்றவனுவ எடுத்துட்டுப் போயிருப்பானுவன்னு சொன்னாரு. அவரு ஒண்ணுமே சொல்லல. இருந்தாலும் ராவுத்தர்கிட்ட சொல்லி விடுறாரு. நான் அங்க இருந்து மெட்ராஸ்க்கு வர்றதுக்குள்ள ராவுத்தர்ட்ட சொல்லிருக்காரு.
காசை எவனோ எடுத்துட்டான்போல. உன்கிட்ட சொல்றதுக்கு தயக்கம். அவனை எதுவும் சொல்லிடாத. நான் சத்தம் போட்டு விட்ருக்கேன். நீ கண்டுக்காதன்னு சொன்னாராம்.
எனக்கு சம்பளமே 40 ஆயிரம்…. 50 ஆயிரம். ரெண்டு லட்சம் ரூபாய் காணோம்னா எவன் விடுவான்? வச்சிட்டுப் போடான்னு சொல்லிடுவான்கள்ல. ஆனா அவருக்குத் தெரியும். அவ்வளவு காசு அவனுக்குத் தேவை இல்லன்னு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.