“நம்பவச்சி ஏமாத்திட்டீங்களேப்பா!!”… 2022-ல் அதிக எதிர்பார்ப்பில் மொக்கை வாங்கிய டாப் 5 திரைப்படங்கள்…  

2022 ஆம் ஆன்டின் இறுதி நாட்களை நெருங்கிகொண்டிருக்கும் இந்த தருணத்தில், இந்த ஆண்டை திரும்பிப் பார்க்கும்போது தமிழ் சினிமாவில் “விக்ரம்”, “பொன்னியின் செல்வன்” போன்ற சாதனை படைத்த வெற்றித் திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன.

ஆனால் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களை சோதனைக்குள்ளாக்கியதை நாம் மறந்திருக்க முடியாது. அவ்வாறு 2022 ஆம் ஆண்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மொக்கை வாங்கிய டாப் 5 திரைப்படங்களை இப்போது பார்க்கலாம்.

  1. எதற்கும் துணிந்தவன்

சூர்யா, பிரியங்கா மோகன், வினய் ஆகியோரின் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி வெளியான திரைப்படம் “எதற்கும் துணிந்தவன்”. இத்திரைப்படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்தார்.

Etharkkum Thunindhavan

Etharkkum Thunindhavan

தமிழின் மிக முக்கியமான இயக்குனராக திகழ்ந்து வரும் பாண்டிராஜ், இதற்கு முன் இயக்கிய “பசங்க”, “வம்சம்”, “கடைக்குட்டி சிங்கம்”, “நம்ம வீட்டுப் பிள்ளை” போன்ற திரைப்படங்கள் பேமிலி ஆடியன்ஸ்களை பெரிதும் கவர்ந்தது. அந்த அளவுக்கு குடும்பத்துடன் ரசிக்கும்படியாக பல அம்சங்கள் அத்திரைப்படங்களில் அமைந்திருந்தன. இதே எதிர்பார்ப்போடுதான் “எதற்கும் துணிந்தவன்” திரைப்படமும் வெளிவந்தது. இத்திரைப்படத்தின் டிரைலர் மிகவும் அட்டகாசமாக இருந்தது.

Pandiraj and Suriya

Pandiraj and Suriya

அந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள் நம்பி திரையரங்கத்திற்குச் சென்றனர். ஆனால் திரைக்கதையில் சுவாரஸ்யம் பத்தவில்லை என்ற காரணத்தினாலும், மிகவும் அழுத்துப்போன கதையம்சத்தாலும் “எதற்கும் துணிந்தவன்” திரைப்படம் ரசிகர்களை நம்பவைத்து ஏமாற்றியது.

  1. பிரின்ஸ்

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் “பிரின்ஸ்”. இத்திரைப்படத்தை அனுதீப் கே.வி. என்ற தெலுங்கு இயக்குனர் இயக்கியிருந்தார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா என்ற ஆங்கிலேய நடிகை நடித்திருந்தார்.

Prince

Prince

எப்போதும் சிவகார்த்திகேயனின் திரைப்படங்களில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. மேலும் இளைஞர்களை கவரும் விதமாக பல சுவாரஸ்யமான எலெமன்ட்டுகள் திரைக்கதையில் அமைந்திருக்கும். ஆனால் “பிரின்ஸ்” திரைப்படத்தில் காமெடியும் ஒர்கவுட் ஆகவில்லை, திரைக்கதையும் ஒர்கவுட் ஆகவில்லை.

Anudeep KV

Anudeep KV

மேலும் “பிரின்ஸ்” திரைப்படத்தின் கதையம்சத்தில் எந்த வித ஜீவனும் இல்லாமல் இருந்தது. ஆதலால் “பிரின்ஸ்” திரைப்படம் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையும் தந்து, அவர்களின் பொறுமையையும் சோதித்துப் பார்த்தது.

  1. வலிமை

அஜித்குமாரின் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வெளியான “வலிமை” திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். அஜித்தின் அறுபதாவது திரைப்படத்தின் பெயர் “வலிமை” என அறிவிக்கப்பட்ட பிறகு, பல மாதங்களாக படத்தை குறித்த எந்த அப்டேட்டும் வரவில்லை.

Valimai

Valimai

ஆதலால் பல மாதங்களாக இணையத்தில் எங்கு திரும்பினாலும் “வலிமை அப்டேட்” என்ற ஹாஸ்டேக் டிரெண்டிங்கில் வலம் வந்தது. சிவாங்கியில் ஆரம்பித்து கிரிக்கெட் வீரர்கள் வரை யாரை பார்த்தாலும் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் குறித்து கேட்கத் தொடங்கினார்கள்.

Valimai Update

Valimai Update

இவ்வாறு ஒரு வெறித்தனமான எதிர்பார்ப்பிற்குப் பிறகு வெளிவந்த “வலிமை” திரைப்படம், ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. அஜித் ரசிகர்களை கூட “வலிமை” திரைப்படம் கவரவில்லை.

H.Vinoth

H.Vinoth

மேலும் அத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த அம்மா சென்டிமென்ட் காட்சிகள் இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டது. ஆதலால் ரசிகர்களுக்கு “வலிமை” திரைப்படம் சோகத்தின் ஒரு மைல்கல்லாக அமைந்தது.

  1. பீஸ்ட்

விஜய் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் “பீஸ்ட்’. இத்திரைப்படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். நெல்சன் இதற்கு முன் இயக்கிய “கோலமாவு கோகிலா”, “டாக்டர்” ஆகிய திரைப்படங்கள் மாபெறும் வெற்றிப் பெற்றது.

Beast

Beast

இத்திரைப்படங்களை தொடர்ந்து நெல்சன் விஜய்யுடன் கைக்கோர்க்கிறார் என்ற தகவல் வெளிவந்தபோது விஜய் ரசிகர்கள் வானத்திற்கும் பூமிக்கும் குதித்தனர். ஆனால் “பீஸ்ட்” படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் தியேட்டரில் இருந்து தலையை தொங்கப்போட்டுக்கொண்டு வெளியே வந்தனர்.

 Nelson

Nelson

நெல்சன் பாணியிலான திரைக்கதை “பீஸ்ட்” படத்தில் ஒர்கவுட் ஆகவில்லை. மேலும் “பீஸ்ட்” படத்திற்கு போட்டியாக “கேஜிஎஃப் 2” திரைப்படம் வெளியானதால் “பீஸ்ட்” திரைப்படம் மரண அடி வாங்கியது.

Beast

Beast

குறிப்பாக “பீஸ்ட்” திரைப்படத்தின் கிளைமேக்ஸில் இடம்பெற்ற விஜய் ஜெட்டில் பறக்கும் காட்சி இணையத்தில் பங்கமாக கலாய்க்கப்பட்டது. ஆதலால் இந்த வருடத்தின் ட்ரோல் மெட்டீரியலாக “பீஸ்ட்” திரைப்படம் ஆகிப்போனது.

1.கோப்ரா

சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்டு மாதம் 31 ஆம் தேதி வெளியான திரைப்படம் “கோப்ரா”. இத்திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஏ ஆர் ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

Ajay Gnanamuthu and Vikram

Ajay Gnanamuthu and Vikram

அஜய் ஞானமுத்து இதற்கு முன் “டிமாண்டி காலனி”, “இமைக்கா நொடிகள்” போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியவர். “கோப்ரா” திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டே துவங்கிவிட்டது. ஆனால் கொரோனா லாக் டவுன் காரணமாக படப்பிடிப்பு தடைபட்டு, அதன் பின் சில மாதங்கள் கழித்து லாக் டவுனுக்கான தடை நீங்கியபிறகு படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது.

எனினும் கடந்த 2021 ஆம் ஆண்டே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், சில காரணங்களால் இத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளி தள்ளிப்போனது. “கோப்ரா” திரைப்படத்தில் விக்ரம் பல்வேறு கெட்டப்களில் வருகிறார் என்பதால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தோடு இத்திரைப்படத்திற்காக காத்திருந்தனர்.

Cobra

Cobra

மேலும் இத்திரைப்படத்தின் டிரைலரை பார்த்தபோது மிகவும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக இருக்கப்போவதாகவும் தெரியவந்ததால் ரசிகர்கள் வெறித்தனமாக இத்திரைப்படத்திற்காக காத்திருந்தனர். இந்த மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையேயும் பல தடங்களுக்கு இடையேயும் ஒரு வழியாக இத்திரைப்படம் ஆகஸ்து மாதம் 31 ஆம் தேதி வெளியானது.

ஆனால் இத்திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாழ்க்கையே வெறுத்துப்போனது போல் ஆனார்கள். படத்தின் திரைக்கதை சுத்தமாக ஒட்டவில்லை. படத்தில் கதையும் சுவாரஸ்யமாக இல்லை. சில காட்சிகள் பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும், அந்த காட்சிகள் படத்திற்கு எந்த விதத்திலும் உதவவில்லை. இது போன்ற பல காரணங்களால் “கோப்ரா” திரைப்படம் இந்த வருடத்தின் படுதோல்வியான திரைப்படமாக அமைந்தது.

Cobra

Cobra

100 கோட் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 40 கோடி மட்டுமே வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ஆதலால் இந்த வருடத்தின் “Disaster” திரைப்படமாகவும் “கோப்ரா” அமைந்துள்ளது.

 

Related Articles

Next Story