2023 Debut Directors: இந்த வருடம் அறிமுக இயக்குனர்களின் ஆதிக்கம் தான் மேலோங்கி இருந்தது. அதுவும் அறிமுகமான முதல் படத்திலேயே தரமான ஒரு வெற்றிப்படத்தை கொடுத்ததன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல ஒரு அங்கீகாரம் அவர்களுக்கு கிடைத்தது. அப்படி எந்தெந்த படங்கள் இந்தாண்டில் வெற்றிப் படங்களாக அமைந்தன என்பதைத்தான் பார்க்க இருக்கிறோம்.

டாடா: கவின் நடிப்பில் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் வெளிவந்த படம்தான் டாடா. கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்திருந்தார். மக்கள் தன் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினையை மையப்படுத்தி வெளிவந்த படம்தான் டாடா. காதலித்து திருமணம் செய்த ஜோடி எதார்த்த வாழ்க்கைக்குள் நுழையும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைதான் இந்த டாடா. எல்லா தரப்பினரையும் திருப்திப் படுத்த படமாக இது அமைந்தது.
இதையும் படிங்க: இளையராஜா போட்ட மெட்டையே பாடலாக்கிய கவிஞர் வாலி.. என்ன பாடல் தெரியுமா?
போர்த்தொழில்: அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளிவந்த படம்தான் போர்த்தொழில். சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் சரத்குமாரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

குட் நைட்: குரட்டை சத்தத்தால் ஏற்படும் பிரச்சினையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்தான் போர்த்தொழில். மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைதான் இந்த குரட்டை சத்தம். இதை மக்கள் ரசிக்கும் படியாக அதை படமாக கொடுத்த வினாயக் சந்திரசேகரை பாராட்டதவர்களே இல்லை.
யாத்திசை : வரலாற்று பின்னனியில் உருவான இந்த படம் பாண்டியர்களின் வாழ்க்கையை எடுத்துக் கூறும் படமாக வெளிவந்தது. தரணி ராஜேந்திரன் என்ற அறிமுக இயக்குனர்தான் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். முற்றிலும் புதுமுக நடிகர்களை வைத்து ஒரு மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்து ஆச்சரியப்படுத்தினார்.
இதையும் படிங்க: என்னதான் வாழ்க்கையே கொடுத்தாலும் பிடித்த இயக்குனர் அவர்தானாம்!.. பாலச்சந்தரிடமே சொன்ன ரஜினி….
அயோத்தி: சசிகுமார் நடிப்பில் மந்திரமூர்த்தி என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் வெளிவந்த படம் அயோத்தி. டிரைடண்ட் ஆர்ட் ரவீந்திரன் தயாரித்த இப்படத்திற்கு ரகுநந்தன் இசையமைத்து இருந்தார். வடமாநிலத்திலிருந்து ஆன்மீக சுற்றுலாவிற்கு வரும் குடும்பம். வரும் இடத்தில் அவரின் மனைவி இறந்துவிட அவரின் உடலை சொந்த மாநிலத்திற்கு கொண்டு செல்ல ஏகப்பட்ட சட்ட சிக்கல்களை சந்திக்கக் கூடிய நிலைமை. அவர்களுக்கு சசிகுமார் எப்படி உதவுகிறார் என்பதுதான் கதை. படம் நல்ல ஒரு வெற்றியை பெற்று சசிகுமார் பாராட்டையும் பெற்றார்.

இப்படி பார்க்கிங், அஸ்வின்ஸ், டிடி ரிட்டர்ன்ஸ், கிடா, ஜோ, கண்ணகி போன்ற படங்களை குறிப்பிடலாம். பெரிய பெரிய ஹீரோக்களை நம்பி செல்லும் இயக்குனர்களுக்கு இது தலை குனிவான விஷயம்.
இதையும் படிங்க: 2023ல் ஓடிடியில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படங்கள்.. மனதை கவர்ந்த ‘மாமன்னன்’…




