Connect with us
ajith

Cinema News

மூன்று நடிகர்களின் முகத்தில் கரியை பூசிய 2023!.. இமேஜ் டேமேஜ் ஆன எஸ்.கே..

Vijayakanth: திரையுலகில் சில வருடங்கள் சிலருக்கு சிறப்பாக அமையும். வெற்றிகளை அள்ளிகொடுத்து அவரின் ரேஞ்ச் வேற லெவலுக்கு கொண்டு போகும். இது நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என எல்லோருக்கும் பொருந்தும். சிலருக்கு அது மோசமாக அமையும். அப்படி 2023ம் வருடம் 3 நடிகர்களின் முகத்தில் கரியை பூசிவிட்டு போயிருக்கிறது.

2023ம் வருடம் பாதியில் சிக்கியவர்தான் சிவகார்த்திகேயன். குறுகிய காலகட்டத்திலேயே பெரிய நடிகராக வளர்ந்து, அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார். அவர் மீது இசையமைப்பாளர் இமான் சொன்ன குற்றச்சாட்டில் சிவகார்த்திகேயனின் இமேஜ் 50 சதவீதம் டேமேஜ் ஆனது. பல பெண் ரசிகைகளின் கோபத்திற்கு அவர் ஆளானர்.

இதையும் படிங்க: கல்யாணம் ஆனதே நம்பல! அதுல இவ்ளோ பெரிய மகளா? வைரலாகும் விஜே ரக்‌ஷனின் மகள் புகைப்படம்

அதைத்தொடந்து சமூக வலைத்தளங்களில் அவரின் புதிய புகைப்படமோ, புதிய படம் பற்றிய தகவல்களோ, அல்லது அவரை பற்றி யுடியூப்பில் செய்தியாளர்கள் பேசினாலோ அங்கு போய் பலரும் அவரைப்பற்றி மோசமான கமெண்ட்டுகளை பதிவிட்டனர். எனவே, அவர் மீது உருவாகியுள்ள கெட்ட பெயர் அயலான் படத்தை பாதிக்கும் எனவும் பலரும் கூறினார்கள். இப்போது படத்தின் ரிசல்ட்டோ ஆவரேஜாகத்தான் இருக்கிறது.

அடுத்து, வாண்டட்-ஆக வண்டியில் வந்து ஏறியவர்தான் நடிகர் அஜித். கடந்த வருடத்தின் இறுதியில் இறந்த விஜயகாந்தின் மறைவுக்கு அவர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை. இதைத்தொடர்ந்து பலரும் அவரை வச்சு செய்தனர். நேரில் வரமுடியவில்லை என்றாலும் விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கையாவது வெளியிட்டிருக்கலாம் என்பது பலரின் கருத்து. 2023ம் வருடம் துவங்கி இந்த பழிசொல் இப்போதுவரை அஜித் மீது தொடர்ந்து வருகிறது.

இதையும் படிங்க: ஸ்ரீவித்யா ஒன்னும் யாரும் இல்லாம சாகல!.. உண்மை தெரியாம பேசாதீங்க!.. பொங்கும் உறவினர்…

3வதாக சிக்கியவர்தான் நடிகர் வடிவேலு. இவரும் விஜயகாந்த் விஷயத்தில்தான் வசமாக சிக்கினார். வடிவேலு வாய்ப்புகள் இல்லாத காலத்தில் அவருக்கு உதவியர் விஜயகாந்த் என்பதால், அவரின் இறப்புக்கு கூட ஏன் வடிவேலு வரவில்லை என விமர்சித்து ஊடகங்கள் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டது.

VKanth - Vadivelu

VKanth – Vadivelu

விரைவில் விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்கு அஜித்தும் வடிவேலுவும் வருவார்கள் என யாரும் நம்பவில்லை. மொத்தத்தில் 2023ம் வருடம் சிவகார்த்திகேயன், அஜித், வடிவேலு என மூன்று பேரின் முகங்களில் கரியை பூசிவிட்டு போயிருக்கிறது. 2024ம் வருடத்திலாவது இந்த கறைகள் அவர்களை விட்டு விலகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது! தரமாக தயாராகி வரும் கலக்கல் காமெடி படத்தின் இரண்டாம் பாகம்

google news
Continue Reading

More in Cinema News

To Top