2024ல் தமிழ் படங்கள் தவறவிட்டதை தட்டி தூக்கிய கோட்… ஒத்த ஆளு போதும்!

Published on: September 10, 2024
---Advertisement---

GoatMovie: இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்தே கோலிவுட் சினிமா ஆட்டம் கண்டு நிலையில் ஒற்றை திரைப்படத்தின் ரிலீஸ் ஆல் தற்போது தலை தூக்க தொடங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த ஆண்டு 3500 கோடிக்கு அதிகமாக வசூல் செய்திருந்தது கோலிவுட் சினிமா. இதில் முக்கிய இடம் பிடித்திருந்தது முன்னணி நடிகர்களின் சொற்ப எண்ணிக்கையிலான திரைப்படம் தான். ஆனால் அதற்கு நேர் மாறாக இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து கோலிவுட்டில் இந்த படமும் சரியாக செல்லாமல் இருந்து வந்தது.

இதையும் படிங்க: ராமமூர்த்தியால் கலங்கும் குடும்பம்… விஜயாவிடம் சிக்கிய மீனா.. மகன்களை கண்டிக்கும் கோமதி

சிவகார்த்திகேயனின் அயலான், தனுஷின் கேப்டன் மில்லர் என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களையே தோல்வியை தழுவியது. தொடர்ந்து, விஜய் சேதுபதியின் மகாராஜா, சுந்தர் சி யின் அரண்மனை உள்ளிட்ட திரைப்படங்கள் ஓரளவு வசூல் செய்த கோலிவுட்டை காத்து வந்தது.

இந்நிலையில் செப்டம்பர் ஐந்தாம் தேதி விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் வசூல் சாதனை செய்திருக்கிறது. கிட்டத்தட்ட படம் வெளியாகி நான்கு நாள் மட்டுமே முடிந்திருக்கும் வசூல் 300 கோடியை நெருங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: மாட்டிக்கினாரு ஒருத்தரு.. ‘மனசிலாயோ’ அச்சு அசல் இந்தப் பாடலின் காப்பி! சரக்கு அவ்ளோதானா?

அந்த வகையில் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் அதிகம் வசூல் செய்த பட்டியலில் 323 கோடியுடன் கோட் நான்காம் இடம் பிடித்திருக்கிறது. ஐந்தாம் இடத்தில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியான அனுமான் 296 கோடியுடன் ஐந்தாம் இடத்தில் இருக்கிறது.

ஃபைட்டர் திரைப்படம் 337 கோடியுடன் மூன்றாம் இடத்திலும், ஸ்ரீ இரண்டாம் பாகம் 708 கோடியுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் 1223 கோடி வசூல் செய்த கல்கி 2898 ஏடி முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 5 நாட்கள் மட்டுமே முடிந்திருக்கும் நிலையில் கோட் திரைப்படம் இந்த பட்டியலில் முன்னேறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.