Connect with us

Cinema News

சிம்ரன், அசின், நயன்தாரா எல்லாரையும் இப்படித்தான் துரத்திட்டாங்க!.. சுரேஷ் கோபி சூடானது ஏன்?..

பிரேமம் என்ற மலையாளப் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது சுரேஷ் கோபியுடன் ஜானகி vs ஸ்டேட் அஃப் கேரளா படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அனுபமா மலையாள சினிமாவைப் பற்றி பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அனுபமா, பிரேமம் படத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். இதை தொடர்ந்து தமிழில் கொடி, தள்ளிப்போகாதே, டிராகன், தெலுங்கில் கார்த்திகேயா 2, டில்லு ஸ்கொயர் போன்ற பல மொழிகளிலும் புகழ் பெற்று விளங்கினார். மேலும், தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில் ஒரு புதிய தமிழ் படத்தில் அனுபமா நடித்து வருகிறார். லைகா சுபாஸ்கரன் தயாரிப்பில் ’லாக்டவுன்’ என்ற படத்திலும் அவர் நடிக்கப்போவதாக தகவகள் வெளியாகியுள்ளது.

பிரேமம் படத்தை தொடர்ந்து மலையாளத்தில் பட வாய்ப்புகள் எதிர்ப்பார்த்தபடி அமையாததால், தற்போது அவர் நடித்துள்ள ஜானகி vs ஸ்டேட் ஆஃப் கேரளா படத்தின் நிகழ்ச்சியில் அது குறித்து, மலையாள சினிமாவில் பலரும் என்னை தவிர்த்தார்கள். எனக்கு நடிக்கக்கூட தெரியவில்லை என்று ட்ரோல் செய்தனர். இருப்பினும் எனக்கு வாய்ப்பு கொடுத்த இப்படத்தின் இயக்குனருக்கு நன்றி எனக் கூறினார்.

இது குறித்து பேசிய நடிகர் சுரேஷ் கோபி, அனுபமா தன் மனதிலிருந்ததை வெளிப்படையாக பேசிவிட்டார். இப்படி நடப்பது முதல் முறையில்லை. அவர் கூறியதில் இருக்கும் உண்மையை நான் அறிவேன். இதே போல நடிகை சிம்ரனுக்கும் நடந்திருக்கிறது. சிம்ரனும் முதலில் மலையாள சினிமாவில் நிராகரிக்கப்பட்டார். பின்னர் அவரை நடிக்க வைக்க அவரை தேடிச் சென்ற முன்னணி இயக்குனர்களைப் பற்றியும் எனக்கு தெரியும்.

சிம்ரன் மட்டுமல்லாமல் கேரளாவை சேர்ந்த அசின் மற்றும் நயன்தாரா ஆகியோர்களும் மற்ற மொழிகளில் முன்னணி நடிகையாக புகழ் பெற்று விளங்கினர். அதே போல அனுபமாவுக்கும் நிச்சயம் நடக்கும். அதற்காக நான் பிராத்தனை செய்கிறேன் என பேசியுள்ளார்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top