22 கோடிக்கு வீடு.! எந்த பயனும் இல்லை.! போயஸ் கார்டனில் புதிய கதை.!

by Manikandan |
22 கோடிக்கு வீடு.! எந்த பயனும் இல்லை.! போயஸ் கார்டனில் புதிய கதை.!
X

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர்களில் ஒருவர் தனுஷ் இவர் தமிழை தாண்டி இந்தி தெலுங்கு ஆங்கில படங்களில் நடித்து ஒரு இந்திய நடிகராக வலம் வருகிறார்.

இவர், தற்போது செல்வராகவன் இயக்கத்தில் "நானே வருவேன்' மற்றும் தெலுங்கு இயக்குனர் இயக்கும் "வாத்தி" ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அண்மையில், மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நிகழ்வு என்றால் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து தான்.

dhanush with wife

ஆமாங்க... இருவரும், தாங்கள் தற்போது பிரிந்துவிட்டதாக தனித்தனியாக அறிக்கை வெளியிட்டு தமிழ் சினிமாவை அதிர வைத்தனர். ஆனால், சில மாதங்களுக்கு முன்புதான் தனுஷ் போயஸ் கார்டனில் இடம் வாங்கி அதில் 22 கோடி பொருட்செலவில் பிரம்மாண்ட வீடுகட்ட துவங்கியுள்ளாராம்.

dhanush with wife

அது, துவங்கப்பட்ட சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது இருவரும் பிரிந்து விட்டனர்.

இதையும் படியுங்களேன்- என்னை அறியாமல் இதை செய்துவிடுகிறேன்.! ரஜினி கூறிய ‘அந்த’ ரகசிய பழக்கம்.!?

தற்போது, அந்த வீடு கட்டுமான பணி என்னவாகும், அவ்வாறு கட்டப்பட்டால் அந்த வீட்டில் இருவரும் மீண்டும் இணைந்து இருப்பார்களா அல்லது வேறு ஏதும் செய்ய உள்ளனரா என்பது இன்னும் தெரியவில்லை. பொருத்திருந்து பார்க்கலாம் எது நடந்தாலும் நல்லதாகவே நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story