ஏன் இந்த வேண்டாத வேலை.! சூர்யாவை கெஞ்சும் ரசிகர்கள்.!
சூர்யா நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் கொடுத்த திரைப்படங்களே. கடைசியாக அவர் நடிப்பில் திரையில் வெளியான ஒரு சில படங்கள் தமிழில் தோல்வியை தழுவினாலும் அவரை கைவிட்டது இல்லை.
அஞ்சான், 24, சிங்கம் 3, தானா சேர்ந்த கூட்டம் ஆகிய திரைப்படங்கள் தமிழில் தோல்வியை தழுவினாலும் தெலுங்கில் கணிசமான லாபத்தை தயாரிப்பாளர்களுக்கு கொடுத்துள்ளன.
தற்போது 24 திரைப்படத்தை இயக்கிய விக்ரம் குமார் மீண்டும் சூர்யாவை சந்தித்து 24 படத்தின் அடுத்த பாகம் குறித்து கதை விவாதத்தில் ஈடுபட்டாராம்.
இதையும் படியுங்களேன் - பட்டதெல்லாம் போதும் சாமி.! சோறு கட்டிக்கொண்டு ஆபிசுக்கு கிளப்பும் சிவகார்த்திகேயன்.!
விரைவில் 24 படத்தின் அடுத்த பாகம் தயாராகும் என கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட சூர்யா ரசிகர்கள் ஏன் இந்த வேண்டாத வேலை ஒரு தடவை பட்டது போதும் என சூர்யாவை கெஞ்சி வருகின்றாராம்.
ஆனால், 24 திரைப்படம் தமிழில் மட்டுமே தோல்வி. மற்ற மொழிகளில் கணிசமான லாபத்தை பெற்றுத் தந்தது. அதுவும் தெலுங்கில் இப்படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. அதனை நம்பி தான் தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது என கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.