Connect with us
Vijayakanth

Cinema History

கேப்டன் விஜயகாந்த் தமிழ் சினிமா உலகில் அறிமுகப்படுத்திய 30 இயக்குனர்கள்!.. அட எல்லாமே ஹிட்டு!..

தமிழ் சினிமா உலகில் பல நடிகர்களும் புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தினாலும் தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்து வந்தவர் கேப்டன் விஜயகாந்த் தான்.

ஆர்.கே.செல்வமணிக்கு கேப்டன் விஜயகாந்த் தான் வாய்ப்பு கொடுத்தார். இவர் பிலிம் இன்ஸ்டிட்யூட்ல படிப்பு முடித்ததும் மணிவண்ணன்கிட்ட அசிஸ்டண்ட்டா இருக்கும்போது ஹாலிவுட் தரத்தில் படம் எடுக்க ஆசைப்பட்டாராம். அதுதான் புலன் விசாரணை. இது பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய படம். பாலு ஆனந்த் என்ற இயக்குனர் ஆர்.சுந்தரராஜன்கிட்ட அசிஸ்டண்ட்டா இருந்தாரு. இவர் கேப்டன் வைத்து நானே ராஜா நானே மந்திரி

பாரதி கணேஷ் 1991ல் கதை சொன்னதும், ராவுத்தர் அவரைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாராம். அதுதான் கண்ணுபட போகுதைய்யா… இவர் பஸ்சில் ஓடி ஓடிப் போகும்போது அவருக்காக கார் கொடுத்து அனுப்பினாராம்.

Oomai vizhigal

Oomai vizhigal

ஊமை விழிகள் படத்தின் இயக்குனர் அரவிந்தராஜ். இந்தப் படத்தின் கதையை எழுதியவர் ஆபாவாணன். ஜெயச்சந்திரனையும் கேப்டன் அறிமுகப்படுத்தினார். விஜயகாந்த், அருண்பாண்டியன், கார்த்திக், சந்திரசேகர் என மல்டி ஸ்டாரர் படம்.

சொல்வதெல்லாம் உண்மை படத்தை நேதாஜி இயக்கினார். 1988ல் தெற்கத்திக் கள்ளன் படத்தை இயக்கியவர் கலைமணி. இவர் பாரதிராஜாவிடம் 10 வருஷம் உதவி இயக்குனராக இருந்தார். பூந்தோட்ட காவல்காரன் படத்தை செந்தில்நாதன் இயக்கினார். இவர் எஸ்.ஏ.சி.யிடம் உதவி இயக்குனராக இருந்தார். லியாகத் அலிகான் விஜயகாந்தின் பாட்டுக்கு ஒரு தலைவன் படத்தை இயக்கினார். இவர் நிறைய படங்களில் வசனம் எழுதியுள்ளார்.

கலைப்புலி எஸ்.தாணுவை இயக்குனராக மாற்றியவர் இவர்தான். அது புதுப்பாடகன். இவர் விநியோகஸ்தராகத் தான் இருந்தார்.1990ல் பானுப்பிரியா தயாரிப்பில் உருவான சிறையில் பூத்த சின்னமலர் படத்தை அமிர்தம் இயக்கினார். மாநகர காவல் படத்தை இயக்கியவர் எம்.தியாகராஜன். அவரது ஒரே படம் இதுதான்.

சபாபதி தட்சணாமூர்த்தி என்றவர் பரதன் படத்தை இயக்கினார். ஜே.பன்னீர் என்பவர் சக்கரை தேவன் என்ற படத்தை இயக்கினார். கே.எஸ்.ரவி இயக்கிய படம் ஆனஸ்ட்ராஜ். கே.ஆர்.உதயகுமார் என்பவர் பதவிப்பிரமாணம் இயக்கினார். ஏ.ஆர்.ரமேஷ் என்பவர் தாயகம் படத்தை இயக்கினார். இந்தப் படத்திற்கு தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது கேப்டனுக்குக் கிடைத்தது.

Ulavuthurai

Ulavuthurai

ரமேஷ் செல்வன் என்ற இயக்குனரை கேப்டன் 125வது படமான உளவுத்துறை படத்தில் அறிமுகப்படுத்தினார். நீருக்கு அடியில் நடந்த முதல் சூட்டிங் இதுதான். வல்லரசு என்ற ஆக்ஷன் படத்தை இயக்கியவர் மகாராஜன். எல்.கே.சுதீஷின் மச்சானை தயாரிப்பாளராகவும் இதே படத்தில் அறிமுகப்படுத்தினார்.

நரசிம்மா என்ற படத்தை இயக்கியவர் திருப்பதி சாமி. 2001ல் வந்தது. எடிட்டிங்கின் போதே அவர் கார் விபத்தில் இறந்து போனார். இந்தப் படத்தை அவருக்கே சமர்ப்பித்தார். ஈஸ்வரன் என்ற இயக்குனரை சிம்மாசனம் படத்தில் அறிமுகப்படுத்தினார். கள்ளழகர் படத்தில் கேப்டன் சோனுசுந்தரை வில்லனாக அறிமுகப்படுத்தினார். இவர் விஜயகாந்தைப் போல வடக்கில் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்.

Vanjinathan

Vanjinathan

ஷாஜி கைலாஷ் என்ற மலையாள இயக்குனர் வாஞ்சிநாதனை இயக்கினார். இந்தப் படத்தின் மூலமாகத் தான் லியாகத் அலிகானை எழுத்தாளராகவும் மாற்றினார் கேப்டன். அருண்பாண்டியனை தேவன் படத்தில் இயக்குனராக அறிமுகப்படுத்தினார்.

இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் தான் கேப்டன் நடித்தாராம். ஆனாலும் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ரமணா படத்தை ஏ.ஆர்.முருகதாஸ்சுக்கு பெரிய ஸ்டார் அந்தஸ்து கிடைத்தது. தீனா நல்ல என்ட்ரியாக இருந்தாலும் ரமணா தான் அவருக்கு பெரிய வரவேற்பைக் கொடுத்தது.

ஏ.எம்.நந்தகுமார் என்பவர் 2003ல் தென்னவன் படத்தை இயக்கினார். சமுத்திரக்கனி நெறஞ்சமனசு படத்தை இயக்கினார். இவரது முதல் படம் உன்னைச் சரணடைந்தேன் என்றாலும் அது தோல்வி அடையவே விஜயகாந்த் தான் 2வது படத்துக்கு வாய்ப்பு கொடுத்தாராம்.

ஜே.பி.என்பவர் சுதேசி என்ற படத்தை இயக்கினார். உதயன் என்பவர் பேரரசு என்ற படத்தை இயக்கினார். சகாப்தம் படத்தை இயக்கியவர் ஒரு புதுமுக இயக்குனர் தான். அவர் பெயர் சுரேந்திரன். இதில் தான் தன் பையன் சண்முக்பபாண்டியனையும் அறிமுகப்படுத்தினார்.

அருள் பொன்னம்பலம் என்பவர் தமிழன் என்று சொல் என்ற படத்தில் அறிமுகப்படுத்தினாராம். இந்தப் படத்தில் அவரது மகன் சண்முகப்பாண்டியனும் நடித்தார். ஆனால் அவரது உடல்நிலை காரணமாகப் படம் இடையிலேயே நிறுத்தப்பட்டது.

google news
Continue Reading

More in Cinema History

To Top