30 அடி பள்ளத்தில் உருண்ட கார்!.. காருக்குள் இளையராஜா, எஸ்.பி.பி!. பதைபதைக்க வைக்கும் சம்பவம்!…

#image_title
Ilayaraja: அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க துவங்கியவர் இளையராஜா. நகரத்தில் கிராமிய இசையை கொண்டு வந்து ரசிகர்களை ரசிக்க வைத்தவர். 70,80 களில் தமிழகத்தில் ஹிந்தி பாடல்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த காலத்தில் அதை மாற்றியவர் இளையராஜாதான். அவர் வந்த பின்னர்தான் தமிழ் பட பாடல்களின் கேசட்டுகள் தமிழகத்தில் அதிக விற்பனை ஆக துவங்கியது.
சினிமா இசையில் உச்சம் தொட்டார் இளையராஜா. பாடல்களில் மட்டுமில்லாமல் பின்னணி இசை மூலம் காட்சிகளுக்கு உயிர் கொடுத்தார். 80களில் இவரின் பாடல்கள்தான் பட்டி தொட்டியெங்கும் பாடிக்கொண்டிருந்தது. அந்த காலகட்டத்தில் திரைப்படங்களின் வெற்றிக்கு இளையராஜாவின் இசை முக்கியம் என்பதால் ரஜினி, கமல், மோகன் போன்ற முன்னணி நடிகர்களும் அவரின் இசைக்காக காத்திருந்தார்கள்.
குறுகிய கால கட்டத்தில் மிகவும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துவிட்டார். சினிமாவுக்கு வந்து 4 வருடங்களில் 100 படங்களுக்கு இசையமைத்த ஒரே இசையமைப்பாளர் உலகிலேயே இளையராஜா மாட்டுமே. அதேபோல், மிகவும் வேகமாகவும் இசையமைக்கும் திறமை கொண்டவர் இவர். ஒரு மணி நேரத்தில் ஒரு படத்திற்கு 5 பாடல்களை இசையமைத்த சம்பவமெல்லாம் நடந்திருக்கிறது.
இப்போதும் மிகவும் ஆக்டிவாக இசையமைப்பது, இசைக்கச்சேரிகளை நடத்துவது, சிம்பொனி இசையமைப்பது என தன்னை பிஸியாக வைத்திருக்கிறார். இந்நிலையில், இளையராஜா சென்ற கார் ஒரு பெரிய விபத்தில் சிக்கி சம்பவம் பற்றி இளையராஜாவின் குழுவில் இப்போதும் வயலின் வாசிக்கும் பிரபாகர் என்பவர் ஊடகம் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

1970ம் வருடம் என நினைக்கிறேன். எஸ்.பி.பிக்கு பொள்ளாச்சியில் ஒரு கச்சேரி. அடுத்த நாள் காலை எனக்கும், இளையராஜாவுக்கும் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இசை தொடர்பான ஒரு தேர்வு இருந்தது. எனவே, அன்று நாங்கள் மூன்று பேரும் காரில் சென்று கொண்டிருந்தோம். அதிகாலை 4.30 மணியளவில் சாலையில் தீடிரென ஒரு சிறுவன் ஓடினான். அதன்பின் வண்டி எங்கோ இடித்து உருண்டது.
எங்களால் கதவை திறந்து வெளியே வரமுடியவில்லை. ஏனெனில் கதவுகள் ஜாம் ஆகிவிட்டது. எனவே, கார் கண்ணாடியை உடைத்து மூன்று பேரும் வெளியே வந்தோம். கார் 30 அடி பள்ளத்தில் உருண்டது அப்போதுதான் எங்களுக்கு தெரிய வந்தது. நல்லவேளையாக எங்களுக்கு பெரிய காயம் எதுவும் இல்லை. அதன்பின் மதுரையை சேர்ந்த ஒருவர் எங்களை அவரின் காரில் கூட்டிச்சென்று சாப்பாடெல்லாம் போட்டு அனுப்பி வைத்தார்’ என பகிர்ந்துள்ளார்.