போட்டது வெறும் 4 கோடிதான்... எடுத்ததோ 10 மடங்கு வசூல்... பட்டையை கிளப்பிய படங்கள்!..
பிரம்மாண்டமாக எடுத்தால் தான் படம் ஓடும் என்று இல்லை. நல்ல கதை அம்சத்துடன் குறைந்த பட்ஜெட்டில் எடுத்தாலும் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும். கோடி கோடியாய் முதலீடு போட்டும் நஷ்டம் அடையும் படங்களுக்கு மத்தியில் 4 கோடியை முதலீடாகப் போட்டு 10 மடங்கு லாபம் பார்த்த தமிழ்ப்படங்களும் உள்ளன. இவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
டிமாண்டி காலனி
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான படம். அருள்நிதி நடித்துள்ளார். எந்த ஒரு மாயாஜாலமும் இல்லை. உறுத்தும் இசையும் இல்லை. ஆனால் படம் பார்ப்பவர்களை மரண பயத்துக்குக் கொண்டு செல்லும். இந்தப்படத்தின் பட்ஜெட் 4 கோடி தான். ஆனால் 55 கோடி வசூல் செய்தது.
எல்கேஜி
ஆர்ஜே.பாலாஜி எல்கேஜி படம் மூலம் தனது திறமையை நிலைநாட்டினார். அரசியல், நய்யாண்டியைத் தைரியமாக எடுத்துச் சொல்லிய இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் 4 கோடி. ஆனால் 42 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
கோலமாவு கோகிலா
நயன்தாராவை தனித்த கதாநாயகியாக நடிக்க வைத்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தரமான படத்தைக் கொடுத்துள்ளார். தமிழ்சினிமா மறந்து போன பிளாக் காமெடியை மீண்டும் டிரெண்ட் ஆக்கினார். நயன்தாராவை லேடி சூப்பர்ஸ்டார் என்று தன்னை நிரூபித்துக் கொள்ள இந்தப் படம் பெரிய ஊன்றுகோலாய் இருந்தது.
4 கோடியில் உருவான இந்தப்படம் 45 கோடி வரை வசூல் செய்தது.
போர் தொழில்
சரத்குமார், அசோக்செல்வன் கூட்டணியில் பெரிய வெற்றிப்படம். தொடர்கொலைகளைக் கண்டுபிடிக்கும் காவல் அதிகாரியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். 4 கோடி பட்ஜெட். வசூல் 60 கோடி.
96
ஆட்டோகிராப் படத்திற்குப் பிறகு பள்ளிக்காதலை தமிழ்சினிமா ரசிகர்களுக்கு மீண்டும் நினைவூட்டிய படம். பள்ளிப்பருவ காதல், காதல் தோல்வி, திருமணமான காதலியை பல வருடங்கள் கழித்து மீண்டும் சந்திப்பது என மொத்த உணர்வுகளையும் எடுத்துக்காட்டியது. 4 கோடி பட்ஜெட். வசூல் 40 கோடி.