ஹீரோக்களை தூக்கி சாப்பிட்ட 4 மாஸ் வில்லன்கள்- படத்துல ஹீரோ இருந்த இடமே தெரியாம போய்ட்டாரே…

Published on: July 18, 2023
vijaysethupathy
---Advertisement---

சில படங்களில் என்னதான் ஹீரோ ஸ்டைலாக இருந்தாலும்,  வின்னலனை புரட்டி போட்டாலும், நம் மனதில் வில்லன் கதாப்பாத்திரம் அதிக இடம் பிடித்திருக்கும். அதற்கு அந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், அந்த நடிகரின் சிறப்பான நடிப்பு என பல காரணங்கள் இருக்கலாம். அப்படி ஹீரோ உயிரை கொடுத்து நடித்திருந்தாலும், அவர்களை ஓவர் டேக் செய்து நடித்து அசத்திய 4 தமிழ் சினிமா வில்லன்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

அரவிந்த் சாமி – தனிஒருவன்

aravind samy

மோகன் ராஜா இயக்கத்தில் 2015ம் ஆண்டு வெளியான தனிஒருவன் திரைப்படம் சூப்பர் ஹெட்டானது. இந்த படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் வில்லனான அரவிந்த் சாமி, சித்தார்த் அபிமன்யுவாக மிரட்டியிருப்பார். இந்த படத்தின் பெயரை சொன்னாலே, நம் மனதிற்கு அரவிந்த் சாமியின் முகம் தான் வரும் என்றே கூறலாம். 

ராட்சசன் – சரவணன்

ratchasan villian

ராம்குமார் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியான ராட்சசன் திரைப்படம் தான் இன்று வரிசையாக வெளியாகும் சைக்கோ த்ரில்லர் படங்களுக்கெல்லாம் முன்னோடி என்றே கூறலாம். விஷ்னுவிஷால், அமலாபால், காலி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த படமும் செம ஹிட் தான். இந்த படத்தில் வில்லனாக நடித்த சரவணன், திகிலான நடிப்பால் நம்மை மிரளவைத்திருப்பார். இந்த படம் வெளியான பிறகு, ஹீரோ விஷ்னுவிஷாலை விட இவரின் நடிப்பை பற்றி தான் பலரும் பேசிவந்தனர். 

அருந்ததி- சோனு சூட்

anushka

2009ம் ஆண்டு வெளியான அருந்ததி படத்தில், அருந்ததி கதாபாத்திரத்தில் வரும் அனுஷ்காவின் நடிப்பு வெறித்தனமாக இருக்கும். அதே போல வில்லனாக வரும் நடிகர் சோனு சூட்டின் நடிப்பும் பயங்கரமாக இருக்கும். பசுபதி என்ற கதாபாத்திரத்தில் மிக கச்சிதமாக நடித்திருப்பார் அசத்தியிருப்பார் சோனு சூட்.

மாஸ்டர் – விஜய் சேதுபதி

master

லோகேஷ் கணகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, பெரிதும் பேசப்பட்டார். மாஸ்டர் படத்தை பார்த்துவிட்டு வந்த விஜய் ரசிகர்கள் கூட விஜய் சேதுபதியின் நடிப்பை பாராட்டி தள்ளினர். 

இதையும் படிங்க- அட்லியின் உதவியாளரை நம்பவைத்து கழட்டிவிட்ட சிவகார்த்திகேயன்!.. நடுத்தெருவில் நிக்கவச்ச கொடுமை!…

prabhanjani

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.