More
Categories: Cinema News latest news

40 லட்சம் போட்டு உருவாக்கிய வீட்டை ஒரே நொடியில் உடைத்து எறிந்த தயாரிப்பாளர்… ஏன் இப்படி!

ஒரு திரைப்படத்திற்காக பிரம்மாண்டமாக செட் போட்டால் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு அந்த செட்டை பல திரைப்படங்களின் படப்பிடிப்பிற்கு வாடகைக்கு கொடுத்து சம்பாதிப்பது சினிமாவில் வழக்கமான ஒன்று. ஆனால் அவ்வாறு பல லட்ச ரூபாய் செலவு செய்து போடப்பட்ட செட் ஒன்றை ஒரே நொடியில் உடைத்திருக்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. அவர் ஏன் அப்படி செய்தார்? என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

Advertising
Advertising

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு மிகப் பிரபலமான தயாரிப்பாளர். அவர் தயாரிக்கும் திரைப்படங்களை மிகவும் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்துவார். உதாரணத்திற்கு அவர் தயாரித்த “கபாலி” திரைப்படத்திற்காக விமானத்தில் விளம்பரம் செய்தார் என்பதை பலரும் அறிந்திருப்போம். கு

றிப்பாக ரஜினிகாந்த் முதன்முதலில் கதாநாயகனாக நடித்த “பைரவி” திரைப்படத்திற்காக ஒரு மிகப்பெரிய பேன்னரை வைத்த கலைப்புலி எஸ்.தாணு, ரஜினிகாந்துக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் அளித்தார். ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டார் என்று அச்சிட்டு விளம்பரப்படுத்திய முதல் நபர் இவர்தான். அதே போல் விஜயகாந்திற்கு “புரட்சிக் கலைஞர்” என்ற பட்டத்தையும் அளித்தார். இவ்வாறு தமிழ் சினிமாவில் மிகவும் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளராக திகழ்ந்து வருகிறார் தாணு.

இதனிடையே கலைப்புலி எஸ்.தாணு 1997 ஆம் ஆண்டு “வி.ஐ.பி” என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தை சபாபதி தக்சினாமூர்த்தி என்பவர் இயக்கியிருந்தார். இதில் பிரபுதேவா, அப்பாஸ், சிம்ரன், ரம்பா ஆகியோர் நடித்திருந்தனர்.

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “வந்ததே லக்கு வந்ததே” என்ற பாடலுக்காக ஒரு பிரம்மாண்ட வீடு செட்டாக போடப்பட்டது. கிட்டத்தட்ட 40 லட்சம் செலவு செய்து அந்த செட்டை போட்டார்களாம். அந்த செட் மிகவும் பிரம்மாண்டமாக இருப்பதை பார்த்த பல தயாரிப்பாளர்கள், அந்த செட்டில் ஷூட்டிங் நடத்த வாடகைக்கு கேட்டிருந்தார்களாம். ஆனால் கலைப்புலி எஸ்.தாணு தனக்கு பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக அந்த செட்டை படப்பிடிப்பு முடிந்தவுடன் உடைத்துவிட்டாராம்.

இதையும் படிங்க: லைலா செய்த அட்ராசிட்டியால் பறிபோன படவாய்ப்பு… அப்போவே இவ்வளவு ரகளையை கொடுத்திருக்காங்களே!

Published by
Arun Prasad

Recent Posts