தொடர்ந்து அடிமேல் அடி.! காட்டுவாசியாக மாறப்போகும் '40 கதை' அஸ்வின்.!

by Manikandan |
தொடர்ந்து அடிமேல் அடி.! காட்டுவாசியாக மாறப்போகும் 40 கதை அஸ்வின்.!
X

அஷ்வின் குமார் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில் தேஜு அஷ்வினி, அவந்திகா மிஸ்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் தான் 'என்ன சொல்லப் போகிறாய்'. இத்திரைப்பம் கடந்த 13 ஆம் தேதி வெளியானது. இத்திரைப்படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் பேனரில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு விவேக் மற்றும் மெர்வின் இசையமைத்துள்ளனர்.

ஒரு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ மூலம் புகழ் பெற்ற அஷ்வின் குமார் பிரபு சாலமனின் அடுத்த படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அட ஆமாங்க..'காடன்' போன்ற சூப்பர் ஹிட் படத்திற்கு பிரபு சாலமன் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பையும் முடித்துள்ளாராம்.

பிரபு சாலமன் இயக்கத்தில் தற்போது கைகோர்த்துள்ள அஸ்வின் புது வித தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் முழுக்க முழுக்க காட்டு பகுதியில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு டிசம்பர் முதல் தொடங்கி மதுரை மற்றும் கொடைக்கானலில் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

இத்திரைப்படம் மலைவாழ் மக்கள் மக்களை பற்றிய கதைதான் என்று சொல்லப்படுகிறது. இந்த திரைப்படத்தில் தம்பி ராமையா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஏப்ரல் மாதம் வெளியிடலாம் என எதிர்பார்க்கபடுகிறது. பிரபு சாலமன் இயக்கத்தில் விரைவில் ‘கும்கி 2’ வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story