40 வருஷத்துக்கு முன்னாடியே இவங்க எல்லாம் பேன் இந்தியா நடிகைகள்… யார் யார்ன்னு தெரியுமா!
சமீப காலமாக பேன் இந்தியா திரைப்படங்களின் வருகை அதிகரித்துள்ளது. அதே போல் அல்லு அர்ஜூன், பிரபாஸ், யாஷ் போன்ற நடிகர்களும் பூஜா ஹெக்டே, சமந்தா ஆகிய பல நடிகைகளும் பேன் இந்திய நடிகர்களாக உருவாகியுள்ளனர். இந்த நிலையில் 40 வருடங்களுக்கு முன்பே பேன் இந்திய நடிகைகளாக திகழ்ந்த தமிழ் நடிகர்களை குறித்து இப்போது பார்க்கலாம்.
பத்மினி
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையாக திகழ்ந்த பத்மினி, கிட்டத்தட்ட 250 திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சிங்கள மொழியிலும், ரஷ்ய மொழியிலும் கூட நடித்துள்ளார். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன்பே ஒரு பேன் இந்திய நடிகையாக வலம் வந்துள்ளார் பத்மினி.
வைஜெயந்திமாலா
தமிழ் சினிமாவில் பல கிளாசிக் திரைப்படங்களில் நடித்த வைஜெயந்திமாலா, தமிழில் டாப் நடிகர்கள் பலருடன் ஜோடிபோட்டு நடித்துள்ளார். இவர் 1950களிலேயே ஹிந்தி, பெங்காலி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
பானுமதி
எம்.ஜி.ஆர், சிவாஜி, போன்ற ஜாம்பவான்களுடனும் அப்போதைய முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டு நடித்தவர் பானுமதி. இவர் கிட்டத்தட்ட 100 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 1950களிலேயே ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளார் பானுமதி. மேலும் தெலுங்கு சினிமாவில் அன்றைய காலகட்டத்தின் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்தவர்.
சாவித்திரி
நடிகையர் திலகம் என்று போற்றப்பட்ட நடிகை சாவித்திரி கிட்டத்தட்ட 250க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் 1950களிலேயே தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தார். மேலும் கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்த சாவித்திரி ஒரு முன்னணி பேன் இந்திய நடிகையாகவும் திகழ்ந்து வந்தார்.
இதையும் படிங்க: பலகோடி பட்ஜெட்டில் உருவாகி அட்டர் ஃப்ளாப் ஆன 5 திரைப்படங்கள்… அட பாவத்த!..