டச்சப் பாயா இருந்து வளர்ச்சியடைந்த ஐந்து நடிகர்கள்!.. லிஸ்ட்ல இவரும் இருக்காரா..??

rajinikanth
டச்சப் பாயா இருந்து தன்னுடைய விடாமுயற்சியினால் சினிமாவில் மாபெரும் வெற்றி நடிகர்களாக வலம் வந்த ஐந்து நடிகர்கள்:
நிறைய நடிகர்கள் ஆரம்ப காலங்களில் சினிமா துறையில் வாய்ப்புக்காக பல வேலைகளை செய்துள்ளனர். அந்த வகையில் சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது என்பது மிகவும் அரிதான காரியம். இந்த நிலையில் நிறைய நடிகர்கள் ஆரம்ப காலங்களில் டச்சப் பாயா வேலை செய்து பிறகு சிறந்த நடிகர்களாக தமிழ் சினிமாவில் உருவெடுத்துள்ளனர்.அந்த வகையில் நாம் முதலில் பார்க்க இருக்கும் நடிகர் சின்னி ஜெயந்த் பற்றி பார்ப்போம்.

Sinni jainth
சின்னி ஜெயந்த்:
சின்னி ஜெயந்த் தனது வித்தியாசமான பாடி லாங்குவேஜ் மற்றும் காமெடி கலந்த நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். நிறைய திரைப்படங்களில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். நிறைய கதாபாத்திரங்களில் மக்களை சிரிக்கவும் வைத்திருக்கிறார் அழுகவும் வைத்திருக்கிறார். அந்த அளவிற்கு இவரது திறமை மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. இவர் இயக்குனர் மகேந்திரன் அவர்களிடம் கை கொடுக்கும் கை எனும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
இதையும் படிங்க- ஊசி போட்டு உடல் எடையை அதிகரித்த நளினி!.. மகன்தான் காரணமாம்… வினோதமா இருக்கே…

Ramesh kanna
ரமேஷ் கண்ணா:
அடுத்ததாக 90s கிட்ஸ்களின் ஃபேவரட் இயக்குனர் மற்றும் நடிகரான ரமேஷ் கண்ணா டச்சப் பாயா வேலை பார்த்து சினிமாவில் இயக்குனராகும் அளவிற்கு உயர்ந்துள்ளார். இவர் நிறைய திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலங்களில் நிறைய கஷ்டங்களை அனுபவித்து தான் இவருக்கு இயக்குனராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

Thambi ramaya
தம்பி ராமையா:
அடுத்ததாக மைனா திரைப்படத்தின் மூலம் தனது சிறப்பான நடிப்பினையும் வெளிப்படுத்தி காமெடி கலந்த வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தம்பி ராமையா அவர்கள் ஆரம்பத்தில் நிறைய எடுபுடி வேலைகளை சினிமா துறையில் பார்த்து தனது கடின உழைப்பின் மூலம் இயக்குனராக பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு முதல் முதலாக கிடைத்தது. இவர் வசனங்கள் எழுதுவதிலும் திறமை நிறைந்த ஒரு நடிகராக திகழ்ந்தார்.

Mano bala
மயில்சாமி:
அடுத்ததாக தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவராக திகழும் மயில்சாமி அவர்கள் ஆரம்ப காலங்களில் டச் ஆஃப் பாய் வேலை பார்த்து தான் பிறகு படிப்படியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இவர் முதன்முதலாக நடிகர் பாக்கியராஜ் அவர்களுடன் தாவணி கனவுகள் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தனது வாய்ப்புக்காக பாக்கியராஜ் அவர்களுடன் மிமிக்கிரி செய்து தான் வாய்ப்பு கேட்டிருக்கிறார் இவருடைய திறமையை பார்த்த பாக்யராஜ் அவர்கள் தனது திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பையும் மயில்சாமிக்கு கொடுத்துள்ளார். மயில்சாமி அவர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் உயிர் துறந்தார் என்பது வருத்தத்திற்குரிய ஒரு விஷயமாகும்.

Mano bala
மனோபாலா:
இந்த நிலையில் அடுத்ததாக இயக்குனர் மனோபாலா அவர்கள் சினிமாவில் டச் பாய் வேலை பார்த்து தான் நடிகராகவும் இயக்குனராகவும் சினிமாவில் பணியாற்றினார்.இவர் முதன்முதலாக ஊர்காவலன் எனும் திரைப்படத்தை தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்கினார் இந்த படம் மாவீரன் வெற்றி படமாக அமைந்தது இதனை அடுத்து இவருக்கு அடுத்த பட வாய்ப்புகளும் தமிழ் சினிமாவில் கிடைத்தது. இந்த நிலையில் நடிகர் மனோபாலா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க- ஆட்டமா காட்டுறீங்க? யாருனு தெரியாம மோதுறீங்க! தனுஷ் படத்தில் பூதாகரமாக வெடித்த சம்பவம்