சினிமாவில் பீல்டு அவுட்டான பிறகு தான் பெரும்பாலான நடிகைகள் கல்யாணத்தை பற்றியே யோசிப்பார்கள். தமிழ் சினிமாவில் நடித்த பல நடிகைகள் வெளிநாட்டுக்காரர்களை திருமணம் செய்துகொண்டுள்ளனர். காதலுக்கு சாதி, மதம், இனம் போன்ற எந்த பாகுபாடும் கிடையாது என்று சினிமாவில் வசனம் பேசிய பல நடிகைகள் தங்களின் நிஜ வாழ்க்கையிலும் அதை நிரூபிக்கும் வகையில் வெள்ளைக்காரர்களை திருமணம் செய்துகொண்டுள்ளனர். அப்படி ஃபாரின் பையனை திருமணம் செய்துகொண்ட 5 தமிழ் சினிமா நடிகைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிச்சா கங்கோபாத்யாய்
தெலுங்கில் அறிமுகமாகி தமிழில் மயக்கம் என்ன, ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யாய். சில படங்களில் மட்டுமே நடித்த இவர் அதன் பிறகு 2019ம் ஆண்டு ஜோ லாங்கெல்லா என்ற வெள்ளைக்காரரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டிலேயே செட்டில் ஆகி விட்டார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
ஸ்ரேயா சரண்
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்திருந்தார். ஆனால் அதன் பிறகு பெரிதாக அவருக்கு படவாய்ப்புகள் கிடைக்வில்லை. இதனையடுத்து இவர் கடந்த 2018ம் ஆண்டு ரஷ்ய நாட்டை சேர்ந்த ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. குழந்தை பிறந்ததையே ரகசியமாக வைத்திருந்த இவர் ஒரு வருடம் கழித்து தான் அந்த தகவலை பகிர்ந்தார். குழந்தை பிறந்த பிறகும் இவர் அவ்அப்போது படங்களில் நடித்து வருகிறார்.
ராதிகா
நடிகை ராதிகா நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தை திருமணம் செய்து விவாகரத்தான பிறகு, இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சார்டு ஹார்டி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். ராதிகாவின் முதல் குழந்தையான ரயானே இவரின் குழந்தை தான். ஆனால் திருமணமான இரண்டே வருடத்தில் இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். முதல் குழந்தை பிறக்கும் போதே கணவருடனிருந்து பிரிந்து வந்துவிட்டார் ராதிகா.
அம்பிகா
நடிகை அம்பிகா ஓரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்ட பறந்த நடிகையாவார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் உச்சத்தில் இருந்தார். அதன் பின்னர் 1988 ஆம் ஆண்டு வெளிநாட்டு வாழ் இந்தியரான ஷினு ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை அம்பிகா. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டார் அம்பிகா.
பிரியங்கா சோப்ரா
நடிகை பிரியங்கா சோப்ரா விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு பாலிவுட்டில் பல படங்களில் நடித்த இவர் பின்னர் ஹாலிவுட்டிலும் கொடி கட்டி பறந்தார். இந்நிலையில் பிரியங்கா சோப்ரா கடந்த 2018-ம் ஆண்டு ஹாலிவுட் நடிகரும் பாடகருமான நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளுககு முன்னர் இவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டனர்.