Cinema History
தமிழில் ஹிட் படங்களில் அறிமுகமாகி ஃப்ளாப் ஆன கதாநாயகிகள்! யார் யார் தெரியுமா?
தமிழ் சினிமாவை பொறுத்தவரை கதாநாயகர்களுக்கு இருக்கும் அளவிற்கான வரவேற்பு கதாநாயகிகளுக்கு இருப்பதில்லை. தொடர்ந்து கதாநாயகிகள் சினிமாவில் தங்களை தக்க வைத்துக் கொள்ள வெகுவாக போராட வேண்டி உள்ளது.
பெரும்பாலும் கதாநாயகிகளுக்கு அவர்களின் வாய்ப்பை முதல் திரைப்படங்களே முடிவு செய்கின்றன. முதல் திரைப்படம் வெற்றி படமாக அமைந்து விட்டால் அதனை தொடர்ந்து அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் முதல் படம் வெற்றி படமாக அமைந்தும் கூட சினிமாவில் வெகு நாட்கள் இருக்க முடியாமல் சினிமாவை விட்டு சென்ற நடிகைகளும் உண்டு. அப்படியான நடிகைகள் ஐந்து பேரை இப்போது பார்க்கலாம்.
நடிகை ரீமா சென்:
2001 ஆம் ஆண்டு வெளிவந்த மின்னலே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இவர் அறிமுகமானார். கெளதம் இயக்கி வெளியான இந்த திரைப்படம் பெரும் வெற்றியைக் கண்டது. அந்த திரைப்படத்திற்கு பிறகு செல்லமே, வல்லவ,ன் ஆயிரத்தில் ஒருவன் என பல படங்களில் வாய்ப்புகளை பெற்றார் ரீமா சென்.
ஆனால் குறுகிய காலங்களே அவர் பிரபலமாக இருந்தார். அதன் பிறகு சினிமாவை விட்டு காணாமல் போய்விட்டார்.
நடிகை பூமிகா:
அதே 2001 ஆம் ஆண்டு வெளியான பத்ரி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் பூமிகா. அறிமுகமாகும் போது பூமிகாவிற்கு அதிக வரவேற்பு இருந்தது. அதனை தொடர்ந்து அவர் ரோஜா கூட்டம் சில்லுனு ஒரு காதல் போன்ற திரைப்படங்களில் நடித்தார். தற்சமயம் தமிழ் சினிமாவில் வாய்ப்பை இழந்த பூமிகா எப்போதாவது ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
நடிகை கிரண்
இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளியான ஜெமினி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் கிரண். ஜெமினி நல்ல வெற்றியை கொடுத்த ஒரு திரைப்படமாகும். அது ஓரளவு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதன் பிறகு அன்பே சிவம், வின்னர் போன்ற திரைப்படங்களில் நடித்த கிரண் பிறகு பட வாய்ப்புகளை இழந்தார், தற்சமயம் பட வாய்ப்புகளுக்காக முயற்சிகளை செய்து வருகிறார்.
மீரா ஜாஸ்மின்
மாதவன் கதாநாயகனாக நடித்த ரன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். அறிமுகமான உடனே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.வெற்றி படங்களாக நடித்த பிறகு மீரா ஜாஸ்மின் சில நாட்களிலேயே பட வாய்ப்புகளை இழந்தார். தற்சமயம் மீண்டும் அவர் தமிழ் சினிமாவிற்கு வர இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன
நடிகை பூஜா
மாதவன் நடித்த ஜே ஜே திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவில்லை என்றாலும் கதாநாயகிக்கு அடுத்த முக்கியமான கதாபாத்திரத்தில் பூஜா நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. அதிலும் நான் கடவுள் திரைப்படம் முக்கியமான திரைப்படம் அதில் கண் தெரியாத கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார் பூஜா. ஆனால் ஏனோ அவருக்கு பிறகும் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.