சீரியல் நடிகைகளுக்கு அடித்த ஜாக்பாட் - சினிமாவில் நுழைந்து கலக்கிய 5 சீரியல் நடிகைகள்!!
சினிமா ஹீரோயின்களை போலவே சீரியல் ஹீரோயின்களுக்கும் பல ரசிகர்கள் உள்ளனர். சீரியலில் நடித்து மிகவும் பிரபலமான பல நடிகைகள் சினிமாவில் கால் பதித்து அங்கும் ஹிட் கொடுத்து கலக்கி வருகின்றனர். அப்படி சீரியலில் அறிமுகமாகி, பிறகு சினிமாவுக்குள் நுழைந்து வெற்றி பெற்ற 5 தமிழ் நடிகைகள பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பிரியா பவானி சங்கர்
செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி, அதன் பிறகு கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்த பிரியா பவானி சங்கர், மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். சமீபத்தில் வெளியான பத்து தல, பொம்மை உட்பட பல படங்களில் நடித்துள்ளார். அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார் பிரியா பவானி சங்கர்.
வாணி போஜன்
தெய்வமகள் சீரியலில் நடித்து பிரபலமானாவர் வாணி போஜன், அதற்கு முன்னரே இவர் சில சீரியல்களில் நடித்திருந்தாலும் தெய்வமகள் மூலம் தான் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு ஓ மை கடவுளே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். லாக் அப், மிரள், பாயும் ஒளி நீ எனக்கு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
ஷிவானி நாராயணன்
பகல் நிலவு, ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்த ஷிவானி நாராயணன், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இவர் தற்போது விக்ரம், வீட்ல விசேஷம், டிஎஸ்பி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தர்ஷா குப்தா
முள்ளும் மலரும், செந்தூர பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்த தர்ஷா குப்தா, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அதன் பிறகு இவர் ருத்ரதாண்டவம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். மேலும் இவர் ஓ மை கோஸ்ட் படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார்.
ஹன்சிகா
நடிகை ஹன்சிகா சிறுவயதில் இருந்தே பல படங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார். சிறு வயதில் நாம் பார்த்து ரசித்த ஷாகலகா பூம் பூம் சீரியலில் நடித்துள்ளார் ஹன்சிகா. வேலாயுதம், எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, மான் கராத்தே உளு்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் ஹன்சிகா.
இதையும் படிங்க- மற்ற ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடிக்க தயார்!.. ஃபிளாப் படங்களால் இறங்கி வந்த சந்தானம்…