ஆண்டவர் முன்னாடி அடிபணிந்த 7 படங்கள்... தப்பித்து ஹிட்டான ஒரே படம்... வசூல் மொத்த விவரம் இதோ...

by Manikandan |
ஆண்டவர் முன்னாடி அடிபணிந்த 7 படங்கள்... தப்பித்து ஹிட்டான ஒரே படம்... வசூல் மொத்த விவரம் இதோ...
X

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது,.100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 430 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

கடந்த 9-ஆம் தேதி இந்த படம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனாலும், இன்னும் பல திரையரங்குகளில் படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு சென்று படத்தை பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில், விக்ரம் படத்தால் அடுத்தடுத்து வெளியான சில படங்களில் தோல்வி அடைந்த சில படங்களின் லிஸ்ட் பற்றி பார்க்கலாம்.

முதலில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன். 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 5 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. வீட்ல விஷசம் 8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 8.9 கோடி வசூல், சுமாரான வெற்றி என்று சொல்லலாம்.

இதையும் படியுங்களேன்- ஆரம்பத்தில் சிம்பு.. இப்போ தனுஷ் தான் ரெம்ப புடிக்கும்.. வம்பில் மாட்டிக்கொண்ட இளம் சிட்டு.!

சிபி சத்யராஜ் நடிப்பில் வெளியான மாயோன் 12 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் வெறும் 3.5 கோடி வசூல் செய்து மிகப்பெரிய தோல்வியை தழுவியுள்ளது. சுந்தர் சி, ஜெய் ஆகியோ நடிப்பில் வெளியான பட்டாம்பூச்சி படம் சுமார் 7 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இந்த படம் வெறும் 1.5 கோடி வசூல் செய்துள்ளது.

அசோக் செல்வன் நடிப்பில் வெளியான வேழம் 4.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 1.2 கோடி வசூல் செய்துள்ளது. அருள் நிதி நடிப்பில் வெளியான டி.பிளாக் 8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் வெறும் 1.47 கோடி வசூல் செய்துள்ளது. மாதவன் நடிப்பில் வெளியான ராக்கெட்ரி திரைப்படம் 60 பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இந்த படம் 21 கோடி வசூல் செய்து தோல்வியடைந்த திரைப்படங்களில் லிஸ்ட்டில் உள்ளது.

இதில் ஒரே ஒரு திரைப்படம் மட்டும் தான் போட்ட பட்ஜெட்டை விட அதிகமாக வசூல் செய்துள்ளது. அந்த படம் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான யானை படம் தான். 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 23 கோடி வசூல் செய்து இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது.

Next Story