தமிழ் சினிமாவில் எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதை சுலபமாக நடித்து கலக்கக் கூடிய ஒரு நடிகர் என்றால் கமல்ஹாசன் என்று கூறலாம். இவருடைய நடிப்பை பார்த்தும் இவரது இயக்கத்தை பார்த்தும் வியந்து பலர் சினிமாவிற்கு வந்ததாகவும் கூறுவார்கள். ஏனென்றால், அந்த அளவிற்கு சினிமா மீது மிகவும் ஈடுபாடு கொண்டவர்.
ஒரு படத்தில் ஒரே மாதிரி நடிக்காமல் ஒவ்வொரு படத்திற்கும் தனது மாறுபட்ட நடிப்பை கொடுத்து வித்தியாசமான பல கெட்டப்கள் போட்டு தமிழ் சினிமாவில் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர் இவர்.
இவரது நடிப்பில் சமீபத்தில் கூட வெளியான “விக்ரம்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று 400 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இன்னும் சில திரையரங்குகளும் கூட ஓடி வருகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் உலக நாயகன் கமல் சினிமாவில் நடிக்க வந்து இன்றுடன் 62 வருடங்கள் நிறைவடைகிறது. குழந்தை நட்சத்திரமாக கடந்த 1960 ஆம் ஆண்டு வெளியான “களத்தூர் கண்ணம்மா “படத்தில் நடித்ததன் மூலம் இவர் சினிமாவில் அறிமுகமானார்.நடிப்பிலும் புதுமையிலும் கமலுக்கு நிகர் கமலே.
இவர் சினிமாவில் நுழைந்து 62 வருடங்கள் நிறைவு செய்து 63வது வருடத்தில் அடியெடுத்து வைப்பதால் அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனை முன்னிட்டு #63Yearsofkamalism என்ற ஹேஸ்டேக்கும் ட்ரெண்டிங்கில் உள்ளது.
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…