70 ஆண்டுகளைக் கடந்தும் இளமை மாறாத பராசக்தி...என்னா வசனம்பா எழுதிருக்காரு கலைஞர்?!
மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி என திரைக்கதை வசனம் எழுதியவர் கலைஞர். பராசக்தி தவிர்க்க முடியாது 1952ல் கலைறுர் கருணாநிதிக்கு வயது 28. தமிழ்சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றால் அது கலைஞர் தான்.
படம் வெளியான அன்று பார்த்துவிட்டு ரசிகர்கள் எல்லோரும் டீகடைகளில் கூட அதுதான் பேச்சு. சிவாஜிகணேசன்னு ஒருத்தன் வந்துருக்கான். என்னமா வசனம் பேசுறாரு. கலைஞர் எப்படி வசனம் எழுதிருக்காரு. 2ம் உலகப்போரின் பின்னணியில் பர்மாவைப் பற்றி பேசிய படம். சமூக அநீதிகளைக் கிழித்து எறிந்தது படம்.
தமிழ்த்திரை உலகை பராசக்திக்கு முன் பராசக்திக்குப் பின் என்று பிரித்துக் கொள்வது நலம். பராசக்திக்குப் பிறகு தான் தமிழ்சினிமா வாழ்க்கையை சிந்திக்கத் தொடங்கியது. பராசக்தி பிறந்து ஒரு வருடம் கழித்து தான் நான் பிறந்தேன்..என்கிறார் வைரமுத்து.
கலைஞரின் திராவிட கொள்கைகள் சார்ந்த வசனங்கள் தமிழகத்தில் எழுச்சியை உண்டுபண்ணியது. தமிழ்சினிமாவை உச்சத்திற்குக் கொண்டு சென்றது. பைத்தியக்கார உலகம்...இந்த உலகத்தில் ஏமாற்றுக்காரன் தான் பிழைக்க முடியும் என்பார் சிவாஜி.
இயக்குனர் வி.சி.குகநாதன் பராசக்தி பாடம் என்பர். பாடம் அல்ல பயிற்சிக்கூடம். இன்றும் அந்தப்படத்தைப் போட்டால் பொருந்துது என்கிறார்.
படம் முழுக்க அனல் பறக்கும் வசனங்கள் இருந்தன. நீ ஏழையாக ஆக்கப்படாவிட்டால் ஏழையைக் கூட நினைத்துக் கூட பார்க்கமாட்டாய்...மலைப்பாம்பை அடக்க மகுடி ஊதுகிறாய்...என்று சிவாஜியின் தங்கை பேசும் வசனம் அனல் பறக்கும்.
அதிலும் சிவாஜி பேசும் நீண்ட கோர்ட் வசனம் நாலரை நிமிஷம் பேசி அசத்துவார். சமூக அநீதி, அவலங்கள், அரசாங்கத்தின் பாராமுகம் என அனைத்தையும் சுட்டிக்காட்டுவார் கலைஞர். முதல் படத்திலேயே முத்தாய்ப்பாய் நடித்திருப்பார் சிவாஜி கணேசன். நீ பிக் பாக்கெட் தானேன்னு போலீஸ் கேட்பார்.
அதற்கு இல்ல...எம்டி பாக்கெட்னு பாக்கெட்டில் கையை விட்டு எடுத்து விடுவார் சிவாஜி.....என்ன ஒரு டைமிங் காமெடி...அதுவும் கருத்துடன் என்று எண்ணத்தோன்றும். பக்தி பகல் வேஷம், காமக்கொடுமை, வறுமை, கொடுமை, ஆட்சியின் அவலம் என அனைத்தையும் தோலுரித்துக் காட்டியது பராசக்தி படம்.
இப்போது பார்த்தாலும் அனைத்தும் பொருந்தும் அளவுக்கு இளமை மாறாமல் அதே செழிப்புடன் திகழ்கிறது பராசக்தி படம். கூர்மையான வசனத்தில் மட்டுமல்லாமல் பாடலிலும் ரசனையுடன் பராசக்தி படம் தமிழ்சினிமாவில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
கா கா கா.., புதுப்பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவளே, தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம் காசு முன் செல்லாதடி என்ற பாடல்களை எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது.
மொத்தத்தில் இது ஒரு ஆன்மிக படத்தின் டைட்டில்...ஆனால் பகுத்தறிவு வசனம் கொண்ட படம்.
1952 அக்டோபர் 17 தீபாவளிக்கு வெளியான இந்தப்படத்தை இந்த 2022 தீபாவளிக்கும் போட்டுப் பார்க்கலாம். இதை ரசிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.