Categories: Cinema History Cinema News latest news

எத்தனை தடவ சொன்னாலும் இடுப்பை அப்படி ஆட்டிட்டு வர முடியல!… ‘அரங்கேற்றம்’ பிரமீளா கண்ணீர்

‘அரங்கேற்றம் லலிதா’ என்றதுமே நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவது பிரமிளா தான். அந்த அளவுக்கு அவர் அப்போது ரசிகர்களின் மனதில் ஒட்டிக் கொண்டார். 70களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாகவே திகழ்ந்தார். வாளிப்பான உடல் அழகு தான் இவரது பிளஸ் பாயிண்ட்.

படத்தை இயக்கிய பாலசந்தருக்கே இந்த பெருமை என்கிறார் அரங்கேற்றம் பிரமிளா. இந்தப் படத்திற்கு முதலில் பிரமிளாவின் தந்தை ஒத்துக்கொள்ளவில்லையாம். அதன்பிறகு படத்தின் கதை முழுவதையும் கேட்டதும் தான் தன் மகளை நடிக்க அனுமதித்தாராம். இந்தப் படத்திற்குப் பிறகு அவளுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று சொன்னாராம் பாலசந்தர். அவர் சொன்னது போலவே நடந்தது. அதன்பிறகு அப்படி ஒரு படம் எனக்குக் கிடைக்கவில்லை என நெகிழ்கிறார் பிரமிளா.

அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டி கொடுத்தார். அதில் தனது முதல் படமான வாழையடி வாழையில் நடித்த அனுபவத்தைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்.

Prameela

‘வாழையடி வாழை’யில் எஸ்.வி.ரங்கராவ், முத்துராமன், வி.எஸ்.ராகவன் என மிகப்பெரிய ஜாம்பவான்களுக்கு மத்தியில் 14 வயது சிறுமி ரோலில் மாஸான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். ‘அது எப்படி முடிந்தது?’ என்று கேட்டதற்கு, எனக்கு நடிக்கத் தெரியாது. டான்ஸ் ஆடத் தெரியாது. படிச்சிட்டு அப்படியே வந்தவ தான் நான். டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கூட ரொம்ப கோபப்படுவாரு, திட்டுவாரு. டான்ஸ்ல கூட “என்னம்மா ஒரு தாள ஞானம் கூட வேண்டாமா…?”திட்டுவாரு.  ஒரு பாட்டு வருது. ஆட வா… புதிய இசை பாட வான்னு ஒரு பாட்டு. அதுக்கு அவரு பொம்பள மாதிரி ஆடிக் காட்டுவாரு.

இதையும் படிங்க… வாலியிடம் பிடிக்காத அந்த ரெண்டு அம்சங்கள்.. கழுவி ஊற்றிய ஜேம்ஸ் வசந்தன்… அட இப்படி எல்லாமா சொன்னாரு?

“என்னம்மா இது எத்தனை வாட்டி சொன்னாலும் அந்த மாதிரி இடுப்பை ஆட்டிட்டு வர முடியல”. கடுமையா திட்டுவாரு. “எங்கே இருந்து தான் வந்திருக்கியோ”ன்னு கோபப்படுவாரு. அப்போ எனக்கு கண்ணுல இருந்து தாரை தாரையா கண்ணீர் வரும்…! ஏன்னா இதுவரைக்கும் அந்த மாதிரி திட்டு வாங்கினது கிடையாது. அப்போ முத்துராமன் சார் சொல்வாரு. “யம்மா இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விட்டுரு. பெரிய ஆளா வருவம்மா…” என்று எனக்கு ஆறுதல் சொல்வதே அவரு தான்… இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தங்கப்பதக்கம் படத்திலும் இவரது நடிப்புப் பேசும்படி அமைந்தது. சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், ஏவிஎம்.ராஜன், கமல், ரஜினி, என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்தியவர் தான் இவர்.

Published by
sankaran v