முதல் பாகத்திலே ட்விஸ்ட் வச்சிருக்கேன்… 7ஜி ரெயின்போ காலனி 2 சூப்பர் அப்டேட்..

7g rainbow colony
7G Rainbow Colony: தமிழ் சினிமாவில் இன்றளவும் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருக்கும் திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து படத்தின் இயக்குனர் செல்வராகவன் கொடுத்திருக்கும் அப்டேட் வைரலாகி வருகிறது.
ரவி மற்றும் அனிதா என்ற இரண்டு கேரக்டர்களின் காதல் கதைதான் 7ஜி ரெயின்போ காலனி. முதல் பாகத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடித்திருந்தனர். இதில் முதல் பாகத்திலேயே சோனியா அகர்வால் இறப்பது போல காட்டிவிட்டனர்.

இப்படத்தின் ஹீரோவாக பிரபல தயாரிப்பாளர் ரத்னத்தின் மகனை ஒப்பந்தம் செய்தார் செல்வராகவன். பின்னர் ஹீரோயின் வேடத்திற்கு ஜெனிலியா, ஸ்வாதி ரெட்டி என பலர் பெயர் அடிப்பட அதை தொடர்ந்தே சோனியா அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஏற்கனவே காதல் கொண்டேன் மற்றும் துள்ளுவதோ இளமை படங்களின் வெற்றிக்கு பின்னர் யுவனும் இப்படத்தில் இணைந்திருந்தார். இதனாலே படத்தின் எல்லா பாடல்களும் மிகப்பெரிய அளவில் சூப்பர்ஹிட் வெற்றியை பெற்றது. படத்தின் எல்லா பாடல்களையும் நா.முத்துக்குமார் எழுதினார்.
3 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு அப்போதே 90 திரையரங்குகளில் வெளியான இப்படம் 10 கோடி வரை வசூல் செய்தது. படத்தின் ஹீரோவுக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்தது. இதை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இயக்குனர் செல்வராகவன் கூறுகையில், 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தின் 50 சதவீத ஷூட்டிங் முடிந்துவிட்டது. இப்படத்தில் கதிரின் வாழ்க்கை 10 வருடத்திற்கு பின்னர் எப்படி இருந்தது குறித்து பேசப்பட இருக்கிறது.
இரண்டாம் பாகம் என்னாவாக இருக்கும் என முதல் பாகத்திலேயே க்ளூ இருக்கும். கண்டிப்பாக ஃபேண்டஸியாக இருக்காது. சோஷியல் படமாகவே இருக்கும். பண்டிகை நாளில் தான் தேதி கிடைக்கிறது. ஆனால் இதுபோன்ற சின்ன பட்ஜெட் வெளியிடுவது கஷ்டமாக தான் இருக்கிறது எனவும் குறிப்பிட்டார்.