Connect with us

Cinema News

13 வருடமாக நடக்கும் 80ஸ் ரீயூனியன்… எப்படி நடந்தது… சீக்ரெட் சொல்லும் லிசி…

80ஸ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் தொடர்ந்து 13 வருடமாக ஒருநாளை தேர்ந்தெடுத்து சந்தித்து வருகின்றனர். இந்த ரீயூனியன் சந்திப்புக்கான தொடக்கம் எப்படி நடந்தது என நடிகை லிசி மனம் திறந்து இருக்கிறார்.

80ஸ் பிரபலங்கள்:

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் இருந்த காலமாக கருதப்படுவது 1980ஐ தான். அப்போது இருந்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஒவ்வொரு வருடமும் 80ஸ் ரீயூனியன் என்ற பெயரில் சந்தித்து வருகின்றனர்.ஒவ்வொரு வருடமும் ஒரு கலரில் அனைவரும் ஆடை அணிந்து அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் அடித்து விடும்.

ரீயூனியன்

80s reunion

இந்த நிகழ்வு கடைசியாக 2019ம் ஆண்டு சீரஞ்சிவியின் ஐதராபாத் இல்லத்தில் 10 வருட சிறப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்திருந்தனர். அதை தொடர்ந்து, 2020 மற்றும் 21 வது வருடம் கொரோனா பரவியதை அடுத்து நிகழ்ச்சியை ரத்து செய்தனர். இதனால் இரண்டு ஆண்டுகள் கேப் விடப்பட்டது.

80ஸ் ரீயூனியன்:

அதற்கு சிறப்பு செய்யும் விதமாக 13வது வருட ’80ஸ் ரீயூனியன்’ சமீபத்தில் நடைபெற்று இருக்கிறது. மும்பையில் நடந்த அந்நிகழ்வில் பாலிவுட் நட்சத்திரங்களான பூனம் தில்லான் மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நான்கு தென் மாநிலங்களைச் சேர்ந்த நடிகர்களுக்கு விருந்து கொடுத்திருந்தனர். ஒவ்வொரு ஆண்டினை போல இந்த வருடம் பெண்களுக்கு வெள்ளி மற்றும் ஆரஞ்சு நிறங்களும் ஆண்களுக்கு சாம்பல் மற்றும் ஆரஞ்சு நிறங்களும் ட்ரஸ்களுக்கான கோட்டாக கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன், லிசி, பூர்ணிமா, ராதா, அம்பிகா, சரிதா, சுமலதா, ஷோபனா, ரேவதி, மேனகா, பூனம் தில்லான், நதியா, பத்மினி கே, வித்யா பாலன், டினா அம்பானி, மீனாட்சி சேஷாத்திரி, ராஜ்குமார், சரத்குமார், சிரஞ்சீவி, பாக்யராஜ், வெங்கடேஷ், அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப், அனில் கபூர், சன்னி தியோல், சஞ்சய் தத், நரேஷ், பானுச்சந்தர், சுஹாசினி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டனர்.

இந்த யோசனை 13 வருடத்திற்கு முன்னர் எனக்கு தோணியது. உடனே நான் அதை சுஹாசினியிடம் கூறினேன். இருவருக்கும் இந்த ஐடியா பிடித்திருந்ததை அடுத்த ஒவ்வொரு வருடமும் இதை செய்து வருகிறோம் என அவரின் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top