தமிழ்த்திரை உலகின் பொற்காலம் எது என்றால் அது 80ஸ் காலகட்டம் தான். அப்போது நடக்கும் கேளிக்கை, சினிமா, நாடகம், காமெடி, பண்டிகை, விளையாட்டு என எது என்றாலும் அது ஒரு அழகியலுடன் இருக்கும். அந்த அழகை சினிமாவும் காட்டத் தவறவில்லை. அந்த வகையில் அப்போது திகில் கதைகள் கொண்ட பல படங்கள் வந்தன.
அந்தக் காலங்களில் எந்தப் படம் வந்தாலும் அது ரசிக்கும்படியாகவே இருந்தது தான் ரசிகர்களுக்குக் கிடைத்த பாக்கியம். அந்தப் படங்களில் பெரும்பாலும் கதாநாயகனாக நடித்தவர் நிழல்கள் ரவி தான். அவை எல்லாமே சூப்பர்ஹிட் தான். என்னென்ன படங்கள் என்று பார்க்கலாமா…
13ம் நம்பர் வீடு
பேபியின் இயக்கத்தில் 1990ல் வெளிவந்த படம். ஜெய்சங்கர், நிழல்கள் ரவி, ஸ்ரீபிரியா, சாதனா உள்பட பலர் நடித்துள்ளனர். சங்கீத ராஜன் இசை அமைத்துள்ளார். படத்தில் ஒவ்வொரு காட்சியும் மிரட்டலாக இருக்கும்.
மைடியர் லீசா
பேபியின் இயக்கத்தில் 1987ல் வெளியான படம். இந்தப் படத்தில் நிழல்கள் ரவி, மனோரமா, சாதனா உள்பட பலர் நடித்துள்ளனர். அப்போதைய ரசிகர்களை இருக்கையின் நுனியில் இருந்து திகிலுடன் பார்க்க வைத்தது இந்தப் படம் தான்.
அதிசய மனிதன்
1990ல் வேலுபிரபாகரன் இயக்கத்தில் வெளியான படம். இந்தப் படத்தில் அதிசயமனிதாக வந்து மிரட்டுபவர் அஜய் ரத்னம். இது நாளைய மனிதன் படத்தோட தொடர்ச்சி. கௌதமி, நிழல்கள் ரவி, ராதா ரவி, சின்னி ஜெயந்த் உள்பட பலர் நடித்துள்ளனர்.
ராசாத்தி வரும் நாள்
ராபி இயக்கத்தில் 1991ல் வெளியான படம். நிழல்கள் ரவி, கஸ்தூரி, நாசர், ராதா ரவி, தியாகு உள்பட பலர் நடித்துள்ளனர். விஜய் ஆனந்த் இசை அமைத்துள்ளார்.
நிழல்கள் ரவியைப் பொறுத்தவரை வில்லனாகவும், ஹீரோவாகவும், குணச்சித்திரத்திலும் நடித்து அசத்தியவர். நீங்களும் ஹீரோதான், நான் புடிச்ச மாப்பிள்ளை, நான் பெத்த மகனே ஆகிய படங்களில் ஹீரோவாக வந்து தாய்க்குலங்களைக் கவர்ந்து இருப்பார். பக்திப்படங்களில் வில்லனாக வருவார். சின்னதம்பி பெரிய தம்பி, தர்மதுரை, சின்ன வாத்தியார் படங்களில் இவர் தான் வில்லன்.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…