80ஸ்களில் கிளாமருக்கு என்று நடிகைகள் இருந்தனர். இவர்கள் தான் படங்களில் அவ்வப்போது கவர்ச்சி அம்சங்களுடன் உலா வந்து ரசிகர்களுக்கு கிக் ஏற்றுவர். அதேபோல் குத்து பாடல்களிலும் இவர்கள் தான் ஆட்டம் போடுவர். அவர்களில் ஒரு சிலரைப்பற்றி இப்போது பார்க்கலாம்.
சில்க் ஸ்மிதா
80களில் தமிழ்சினிமாவில் கவர்ச்சிக்கென தனி முத்திரை பதித்து கொடிகட்டிப் பறந்தவர் சில்க் ஸ்மிதா. வண்டிச்சக்கரம் என்ற படத்தில் அறிமுகமானார். அலைகள் ஓய்வதில்லை, மூன்றாம்பிறை, சகலகலா வல்லவன், தனிக்காட்டு ராஜா, மூன்று முகம், பாயும்புலி, சூரக்கோட்டை சிங்கக்குட்டி என முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடித்து வெற்றிக்கு வழிவகுத்தார். இவர் வரும்போதெல்லாம் திரையரங்களில் அக்கால ரசிகர்கள் விசில் போட்டு ஆர்ப்பாட்டம் செய்வார்கள்.
டிஸ்கோ சாந்தி
ராத்திரி நேரத்து பூஜையில் பாடலைக் கேட்டவர்களும், பார்த்தவர்களும் டிஸ்கோ சாந்தியை மறக்க மாட்டார்கள். செம குத்தாட்டம் போட்டு இருப்பார். இந்தப்பாடல் ஊமைவிழிகள் படத்தில் இடம்பெற்றுள்ளது. இவரது கவர்ச்சி அம்சங்களில் பல படங்கள் வந்துள்ளளன. அவற்றில் உதயகீதம், கிழக்கு ஆப்ரிக்காவில் ஷீலா, மூடுமந்திரம், வெற்றிவிழா, தர்மதேவதை, உரிமை கீதம், தர்மத்தின் தலைவன் ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை.
பல்லவி
இவர் தமிழ்சினிமாவில் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமான கவர்ச்சி நடிகை. இவர் நடித்த படங்களில் தர்மதேவதை, அறுவடை நாள், வேலைக்காரன், சூரசம்ஹாரம், ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன், வேடிக்கை என் வாடிக்கை, புருஷன் எனக்கு அரசன் உள்பட பல படங்கள் வெற்றி கொடி நாட்டின.
அனுராதா
80 மற்றும் 90களில் தமிழ்சினிமாவில் சில்க்கிற்கு அடுத்தபடியாக கவர்ச்சியில் கலக்கியவர் இவர்தான். இவர் படங்களைப் பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. உயரமான நடிகையான இவர் தமிழ்ப்படங்களில் சண்டைக்காட்சிகளில் திறமையாக நடித்தார். சிவப்பு நிலா, இளமை காலங்கள், விதி, தங்கமகன், முத்து எங்கள் சொத்து, அந்த ஒரு நிமிடம் உள்பட பல படங்களில் நடித்து அசத்தினார்.
ஜெயசித்ரா
இவர் ஆந்திரா நடிகை. தமிழ்ப்படங்களில் கவர்ச்சி அம்சங்களில் கலக்கியவர். இவர் 70 மற்றும் 80களில் நடித்த படங்கள் பல ஹிட்டாகி உள்ளன. குறத்திமகன், அரங்கேற்றம், பட்டாம்பூச்சி, சொல்லத்தான் நினைக்கிறேன், சினிமா பைத்தியம், இளமை ஊஞ்சலாடுகிறது உள்பட பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்…
திரைப்பட இயக்குனர்…
Atee: தமிழ்…
Biggboss Tamil:…
நடிகர்கள் என்பவர்கள்…