உயிர் பயத்த காட்டிட்டாங்க பரமா... 90ஸ் கிட்ஸ் பார்த்த அலறிய டெரர் படங்கள்...

டெரர் படங்கள்
பேய் படங்கள் என்றாலே அலறி ஓடும் ரசிகர்கள் இன்று இருக்கத்தான் செய்கிறார்கள். இப்போது வரும் பேய் படங்களை விட 90ஸ் கிட்ஸ்களுக்கு இருந்த பேய் படங்கள் ரொம்ப பயமாக தான் இருக்கும். அப்படி ஷாக் கொடுத்த டாப் 5 டெரர் படங்கள் லிஸ்ட் உங்களுக்காக...
13ம் நம்பர் வீடு:
மலையாளத் திரைத் துறையைச் சேர்ந்த பேபி இயக்கத்தில் வெளியான படம். நிழல்கள் ரவி, லலிதா குமாரி இணைந்து நடித்திருந்தனர். 13-ம் எண்ணுள்ள வீட்டுக்கு ஒரு குடும்பம் குடி வருகிறார்கள். அங்குள்ள ஆண்கள் எல்லாம் மர்மமான முறையில் இறந்துவிடுவர். இதை தொடர்ந்து என்ன நடக்கும் என்பதே கதை.

வா அருகில் வா
ஜமீன் கோட்டை:
கலைப்புலி ஜி. சேகரன் கதை எழுதி, அவரே நடித்து வெளிவந்த திரைப்படம் ஜமீன் கோட்டை. ராமச்சந்தர் இயக்குனராகவும், சிற்பி இசையமைப்பாளராகவும் பணியாற்றினர். ஒரு ஜமீன் கோட்டையில் இருக்கும் பேயை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம். செம டெரருங்க!
யார்:
சக்தி கண்ணன் இயக்கிய இப்படத்தில் அர்ஜூன் மற்றும் நளினி இணைந்து நடித்திருந்தனர். பிசாசு செய்யும் சேட்டைகளை காட்சிப்படுத்திய விதத்திலே படம் இன்னுமும் பலருக்கு பயத்தினை கொடுத்தது.
வா அருகில் வா:
அனபெல்லா பொம்மைக்கெல்லாம் நாங்க தாங்க முன்னோடி ரகம் தான் இந்த படம். ரம்யா கிருஷ்ணன் மற்றும் ராஜா இணைந்து நடித்த இப்படம் மிகப்பெரிய ரீச் பெற்றது. இரு மனைவி கதை முதல் மனைவியின் ஆவி எப்படி பழி வாங்குகிறது என்பதை சொல்லிய விதத்தில் செம பயத்தினை பார்த்தவர்களுக்கு கொடுத்தது.

ஷாக்
ஷாக்:
வி. தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரசாந்த்,மீனா இணைந்து நடித்திருந்தனர். ஒரு மாடர்ன் குடும்பத்தில் நடக்கும் டெடர் சம்பவத்தை கொண்டிருக்கும். அதுமட்டுமல்லமல் இப்படம் வெளிவந்த நேரத்தில் இப்படத்தினை தனியாக பார்ப்பவர்களுக்கு பரிசு அறிவிக்கப்பட்டதெல்லாம் நடந்தது. படம் அந்த அளவு டெரர்.