மனசாட்சியே இல்லாமல் காப்பியடிக்கப்பட்ட 90’ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் பாடல்கள்… இது தெரியாம போச்சே…
தமிழ் சினிமாவில் பாடல்களுக்கான ட்யூனை வேறு சில பாடல்களில் இருந்து காப்பியடிப்பது என்பது காலம் காலமாக நடந்து வருவதுதான். எம்.எஸ்.வி. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, ஹாரீஸ் ஜெயராஜ், அனிருத் என யாருக்கும் இதில் விதிவிலக்கு இல்லை. அது காப்பியடிக்கப்பட்டதா? அல்லது Inspire ஆகி இசையமைப்பாளர் உருவாக்கியதா? என்ற கேள்விகள் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், பல இசையமைப்பாளர்களின் பாடல்கள் எந்த பாடல்களில் இருந்து எடுக்கப்பட்டவை என்ற தகவல்கள் இணையத்தில் தெள்ளத்தெளிவாக கிடைத்து வருகிறது.
அவ்வாறு 90ஸ் கிட்ஸ்கள் மிகவும் கொண்டாடித் தீர்த்த பல பாடல்களில், சில பாடல்கள் காப்பியடிக்கப்பட்டும் இருக்கின்றன. இந்த விஷயம் கூட அக்காலகட்டத்தில் தெரியாமல் அந்த பாடல்களை எல்லாம் அவர்கள் கொண்டாடியிருக்கிறார்கள். அந்த பட்டியலில் சில பாடல்களை குறித்து இப்போது பார்க்கலாம்.
கடந்த 2002 ஆம் ஆண்டு விஜய், ரீமா சென் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “பகவதி”. இத்திரைப்படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கியிருந்தார். தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இதில் “கை கை வைக்கிறா” என்றொரு பாடல் 90’ஸ் கிட்ஸ்களால் மிகவும் கொண்டாடப்பட்ட பாடலாகும். ஆனால் இந்த பாடல் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான “ஜெயம்” படத்தில் இடம்பெற்ற “ரானு ரானு” என்ற பாடலின் காப்பி என தெரிய வந்திருக்கின்றது.
அதே போல் கடந்த 2000 ஆம் ஆண்டு பிரபு தேவா, ஜெயா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “பெண்ணின் மனதை தொட்டு”. இத்திரைப்படத்தை எழில் இயக்கியிருந்தார். எஸ்.ஏ.ராஜ்குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இதில் “கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா” என்று ஒரு பாடல் இடம்பெற்றிருந்தது. 90’ஸ் கிட்ஸ்களின் மிக விருப்பமான மெலோடி பாடல் இது. ஆனால் இந்த பாடல் 1959 ஆம் ஆண்டு வெளியான “கன்ஹையா” என்ற ஹிந்தி திரைப்படத்தில் இடம்பெற்ற “ருக் ஜாவோ” என்ற பாடலின் காப்பி என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.
கடந்த 2003 ஆம் ஆண்டு ஷாம், த்ரிஷா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “லேசா லேசா”. இத்திரைப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியிருந்தார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படியாக அமைந்தது. மேலும் 90ஸ் கிட்ஸ்களின் மிக விருப்பமான ஆல்பம்களில் ஒன்றாகவும் இருக்கிறது.
இதில் “ஏதோ ஒன்று ஏதோ ஒன்று” என்ற ரம்மியமான பாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. அந்த பாடல் “கிருஸ்துமஸ் கோர்னுகோப்பியா” என்ற பழைய கிருஸ்துவ ஆல்பத்தின் அப்பட்டமான காப்பி என கூறப்படுகிறது.
மேலும் கடந்த 2003 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “காதல் கொண்டேன்”. இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தின் பாடல்களை குறித்து நாம் தனியாக கூறத்தேவையில்லை.
அந்த அளவுக்கு 90’ஸ் கிட்ஸ்களின் விருப்பமான ஆல்பமாக திகழ்ந்து வருகிறது. இதில் “காதல் மட்டும் புரிவதில்லை” என்று ஒரு பாடல் இடம்பெற்றிருந்தது. இப்பாடல் மிகவும் பிரபலமான பாடலாகும். ஆனால் இப்பாடல் “ஹெட்னிங்கனா” என்ற பேகன் இனத்து நாட்டுப்புற பாடலை சார்ந்து இருக்கும் ஒரு ஆல்பத்தின் அப்பட்டமான காப்பி ஆகும். பாவம்! 90’ஸ் கிட்ஸ்களை எப்படி எல்லாம் ஏமாத்தியிருக்கிறார்கள்.