இதெல்லாம் மறக்க முடியுமா?.. இதுவரை பீட் பண்ணமுடியாத 90 கிட்ஸின் பிரபலமான சீரியல் பாடல்கள்!..
வெள்ளித்திரையில் கிடைக்கிற மரியாதையும் தாண்டி இப்போது சின்னத்திரையில் அதிகமாகவே கிடைத்து வருகிறது என பல பிரபலங்கள் சீரியலை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அதுவும் வெள்ளித்திரையில் கோலோச்சிய நடிகர்கள் எல்லாம் இப்போது சின்னத்திரையில் நடித்து வருகின்றனர்.
எதாவது ஒரு விதத்தில் சீரியல்களும் நமது அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவருகின்றது. பெரியவர்கள் சீரியலை பார்க்கும் போது இளம் தலைமுறையினரும் எதாவது ஒரு சீரியலை பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்படுகின்றனர். சீரியல் ஓடாத வீடுகளே இல்லை என்பதை பார்க்க முடியாது.
அந்த வகையில் 90 கிட்ஸின் மனதை கொள்ளை கொண்ட சீரியல்களும் அதில் அமைந்த பாடல்களும் எவை என்பதை தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். யாராலும் இன்று வரை மறக்க முடியாத சீரியல் என்றால் அது ‘மெட்டி ஒலி’ சீரியல் தான். 5 பெண்களை பெற்று தனி ஆளாக இருந்து அம்மா இல்லாமல் அந்த பெண்குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி பெருமையை நிலை நாட்டிய கதையாகத்தான் மெட்டி ஒலி சீரியல் வரவேற்பை பெற்றது.
கிட்டத்தட்ட 811 எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிய மெட்டி ஒலி சீரியல் இரவு 7.30 மணி ஆனதும் அனைத்து வீடுகளிலும் ஒலிக்கு பாடலாக மெட்டி ஒலி சீரியலின் பாடல் இருந்தது. அந்தப் பாடலை தான் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ஒலித்துக் கொண்டிருக்கும் பாடலாகவே அமைந்தது. தினா இசையில் வைரமுத்து வரிகளில் நித்ய ஸ்ரீ பாடிய பாடல் தான் இது.
அடுத்ததாக 1999 முதல் 2001 வரை 467 எபிசோடுகளாக ஒளிப்பரப்பான சீரியல் தான் ‘சித்தி’. இந்த சீரியலில் அமைந்த ‘கண்ணின் மணீ கண்ணின் மணீ’ பாடலும்
ரசிகர்களை அதிகளவு கவர்ந்தது. இதுவும் தினா இசையில் வைரமுத்து வரிகளில் அமைந்த பாடலாகும். அடுத்து சனிக்கிழமை தோறும் அனைவரும் விரும்பி பார்க்கும் சீரியலாக ‘வேலன்’ சீரியல் அமைந்தது. இதில் சீதா, வியட் நாம் வீடு சுந்தரம் நடிக்க இந்த சீரியலில் உள்ள ‘கொக்கரக்கோ சேவல் ஒன்னு என்ன சொல்லி பாடுது’ என்ற பாடல் மிகவும் பிரபலமானது.
சனிக்கிழமை வேலன் என்றால் ஞாயிற்றுக் கிழமை தோறும் பிரபலமான சீரியலாக ‘சூலம்’ சீரியல் அமைந்தது. இதில் நடிகை சுவலெட்சுமி இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். இதில் அமைந்த ‘ஓம் மாகாள் நீ வா தாய்’ என்ற பாடல் அனுராதா ஸ்ரீராம் குரலில் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இப்படி பல சீரியல்களின் பாடல்கள் இன்று வரை நம் நெஞ்சை விட்டு நீங்காமல் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.
இதையும் படிங்க :ரஜினியையே லெஃப்ட் ரைட் வாங்கிய குணச்சித்திர நடிகர்… இவ்வளவு தைரியமா இவருக்கு?