‘96’ படத்தின் இரண்டாம் பாகமா? யார் நடிக்கப் போறாங்க தெரியுமா?
96 Movie: கடந்த 2018 ஆம் ஆண்டு பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் 96. இந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருப்பார். வழக்கமான காதல் கதையாக இல்லாமல் அனைவர் மனதிலும் போய் உட்கார்ந்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு வித்தியாசமான காதல் கதையாக கொடுத்திருந்தார் பிரேம்குமார்.
சிறுவயதில் யாருக்கும் காதல் வராமல் இருக்காது. அதுவும் ஒரு காதலோடு முடிந்திருக்காது. ஒவ்வொரு பருவத்திலும் கண்டிப்பாக காதல் வந்தே தீரும். இந்த உலகத்தில் பிறந்த எந்தவொரு மனிதனும் காதலிக்காமல் இருந்திருக்க மாட்டான். அதிலும் குறிப்பாக பள்ளிபருவ காதல் என்பது எக்காலத்தும் நம் மனதை விட்டு நீங்காத ஒன்று.
இதையும் படிங்க:டைவர்சா எப்போ? ஜெயம் ரவி அறிக்கைக்கு ஆர்த்தி வெளியிட்ட அதிரடி பதில்!.. செம டிவிஸ்டா இருக்கே..
அப்படி ஒரு மையக்கருத்தை வைத்துதான் பிரேம் குமார் இந்த படத்தை எடுத்திருப்பார். அதுவும் பழைய மாணவர்கள் ஒன்று கூடல் சம்பவம் அநேக பள்ளிகளில் நடக்கும் நிகழ்வாக இருக்கின்றது. அப்போது தன் பழைய காதலியை பார்க்கும் போது அந்த காதலனுக்கு ஏற்படும் ஒரு உணர்வு இருக்கிறதே? அதை சொல்லி புரிவது கிடையாது.
அப்படி ஒரு சம்பவத்தில் இருந்துதான் இந்தப் படத்தின் கதையே ஆரம்பமாகும். அதில் விஜய் சேதுபதி திரிஷாவை பள்ளியில் இருந்து காதலிக்கிறார். அதன் பிறகு கல்லூரி மாறுகிறார்கள். அப்பொழுதும் திரிஷாவை தேடிதேடித்தான் விஜய்சேதுபதி வருவார். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு திரிஷா மேற்படிப்புக்காக வேறு ஊருக்கு செல்ல இருவரும் பிரிகிறார்கள்.
அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் கதை. 96 படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த படமாக அமைந்தது. எத்தனையோ படங்களின் இரண்டாம் பாகம் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கையில் 96 படத்தின் இரண்டாம் பாகமும் நன்றாக இருக்கும் என்று தோன்றும்.
இதையும் படிங்க:டேக் ஆப் ஆகும் வாடிவாசல்!.. லண்டன் பறக்கும் வெற்றிமாறன்!.. பரபர அப்டேட்!…
அப்படி 96 படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ஸ்கிரிப்டே எழுதி முடித்துவிட்டேன் என்று அதன் இயக்குனர் பிரேம்குமார் சமீபத்திய பேட்டியில் கூறினார். இந்த இரண்டாம் பாகத்தின் கதையின் தாக்கம் என்னை ஆழமாகவே பாதித்திருப்பதாகவும் பிரேம் குமார் கூறியிருக்கிறார். ஸ்கிரிப்டை இன்னும் விஜய்சேதுபதியிடம் சொல்லவில்லை. அவரின் மனைவியிடம்தான் சொல்லியிருக்கிறேன் என்றும் பிரேம்குமார் கூறினார்.
அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதி கால்ஷீட் மற்றும் திரிஷாவின் கால்ஷீட் எல்லாம் நல்ல படியாக அமைந்தால் படத்தை ஆரம்பித்துவிட வேண்டியதுதான் என்றும் பிரேம் குமார் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: பட்டன் இல்லாத டிரெஸ் பாடா படுத்துது!.. ஃபேன்ஸை கூச்சப்பட வைக்கும் பூஜா ஹெக்டே!…