மீண்டும் ரசிகர்களை சந்திக்க வரும் ராம் ஜானு.... உருவாகிறது 96 படத்தின் இரண்டாம் பாகம்..!

by Rohini |
96
X

பொதுவாக யாராலும் அவர்களின் பள்ளி கால வாழ்க்கை மற்றும் காதலை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அப்படிப்பட்ட பள்ளிப்பருவ வாழ்க்கையை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் விதமாக கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் தான் 96. 90'ஸ் கிட்ஸ்களின் பேவரைட் படமாக மாறிய இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

பலர் இந்த படத்தின் கதை தங்களின் வாழ்க்கையோடு இணைந்திருப்பதாக கூறி படத்தை அந்த அளவிற்கு ரசித்தார்கள். ராமாக விஜய் சேதுபதியும், ஜானுவாக த்ரிஷாவும் அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார்கள். நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு ஃபீல் குட் படம் பார்த்த நிம்மதி இருந்ததாக ரசிகர்கள் கூறியருந்தனர்.

96_movie

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் பிரேம் குமார் 96 படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டிருப்பதாகவும், அதுகுறித்த திரைக்கதைக்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒன்றில் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

96 படத்தின் கதைப்படி தனது முன்னாள் காதலர் ராமை பார்ப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த ஜானு, அவரை சந்தித்து விட்டு மீண்டும் சிங்கப்பூருக்கு விமானத்தில் செல்வதுடன் முதல் பாகம் முடிவுக்கு வரும். தற்போது அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாம்.

ram_janu

அதன்படி சிங்கப்பூர் சென்ற ஜானுவை ஹீரோ ராம் தேடி சிங்கப்பூர் செல்ல உள்ளதாகவும், அங்கு நடக்கும் காட்சிகள் தான் இரண்டாம் பாகம் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது. எது எப்படியோ நாங்க மறுபடியும் ராம் ஜானுவ திரையில பார்த்தா போதும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Next Story