தனுஷை முந்தும் ஹிப்ஹாப் தமிழா! ஆச்சரியமான தகவல்!

Published on: January 27, 2020
---Advertisement---

aa601cc41b4a948ef358da6c84182ed1

தனுஷ் நடித்துவரும் பட்டாஸ் திரைப்படத்தை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தனுஷ் நடித்துவரும் கர்ணன் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

இந்த நிலையில் தனுஷ் படத்தை தயாரிக்கும் முன்பாக இன்னொரு படத்தையும் தயாரிக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை ஒரு அறிமுக இயக்குனர் இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது, படப்பிடிப்பும் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த ’மீசைய முறுக்கு’ ’நட்பே துணை’ ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது என்பதும் அவர் நடித்துள்ள ’நான் சிரித்தால்’ என்ற திரைப்படம் வரும் காதலர் தினத்தில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Comment