இந்திய சினிமாவில் சினிமா வரலாற்றிலயே இப்படி ஒரு தாக்கத்தை இதுவரை யாரும் பாத்திருக்க மாட்டார்கள். அப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய படம் கே.ஜி.எஃப் -2. மிகவும் பின் தங்கிய கன்னட சினிமாவை உச்சத்திற்கு கொண்டு சென்ற படம் கே.ஜி.எஃப்.

கே ஜி எஃப் -1 படம் வெளியாகும் போது பெரிதாக எதிர்பார்ப்புகள் இல்லை. படம் வெளியான பிறகு கிடைத்த விமர்சனங்களால் அந்த படம் மாபெரும் வசூலை குவித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது கேஜிஎப் 2 திரைப்படம் உருவாகி வருகிறது.

படத்தை இயக்கியவர் பிரசாந்த் நீல்.இப்படத்தின் ஆலோசனைகளை பற்றி தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் மூவரும் சேர்ந்து ஆலோசித்து தான் முடிவு எடுப்பார்களாம். ஒற்றுமையினால் கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம்.

மேலும் பிரபல பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கனாதன் கூறுகையில் இன்னொரு சுவாரஸ்யமான தகவலை நமக்களித்தார்.என்னவெனில் இப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் நல்ல குடிச்சிட்டு தான் கதையையே எழுதுவாராம்.பின் காலையில் எழுந்து ஏதாவது தப்பு இருக்கானு பாத்து சரி பண்ணிட்டு தான் அடுத்தகட்ட வேலையை பார்ப்பாராம்.