
அமரர் கல்கி எழுதிய ’பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை பிரபல இயக்குனர் மணிரத்னம் அவர்கள் தற்போது படமாக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது
முதல் கட்ட படப்பிடிப்பில் ஜெயம்ரவி, கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பில் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
இந்த நிலையில் சற்று முன்னர் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ’பொன்னியின் செல்வன்’ குறித்து ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். பொன்னின் செல்வன் படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் அவர்கள் இந்த படத்தின் ஸ்டில்லை தன்னிடம் சில நாட்களுக்கு முன்னர் பகிர்ந்து கொண்டதாகவும் அந்த ஸ்டில்லை பார்த்து தான் அசந்து போனதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
இதிலிருந்து பொன்னியின் செல்வன் திரைப்படம் எந்த அளவுக்கு கச்சிதமாக உருவாக்கப்பட்டு வருகிறது என்பது புரிய வருகிறது ஏஆர் ரஹ்மானின் இந்த ட்வீட்டை அடுத்து அவர் பார்த்த ஸ்டில்லை நாமும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஒவ்வொருவர் மனதிலும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்
Last week DOP Ravivarman shared some stills from #ManiRatnam’s #PonniyinSelvan ..looks totally lit
— A.R.Rahman (@arrahman) January 26, 2020