தங்க இடம் இல்லாமல் 9 மாதங்கள் நாயுடன் ஒரே அறையில் கழித்த நடிகை….!

Published on: April 26, 2022
biya bajpai
---Advertisement---

இன்று திரையுலகில் டாப் நடிகர் மற்றும் நடிகைகளாக வலம் வருபவர்கள் ஆரம்ப காலத்தில் பல்வேறு பிரச்சனைகளையும், கஷ்டங்களையும் தாண்டி தான் இந்த இடத்தை அடைந்துள்ளனர். இதில் பலரது சோக கதைகளை நாம் கேட்டிருப்போம். தற்போது பிரபல நடிகை ஒருவரும் அவர்பட்ட துன்பங்களை கூறியுள்ளார்.

அவர் வேறு யாருமல்ல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான பொய் சொல்ல போறோம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பியா பாஜ்பாய் தான். இப்படத்தை தொடர்ந்து கோவா, கோ, அபியும் அனுவும் போன்ற சில தமிழ் படங்களில் பியா நடித்தார்.

biya bajpai

அதன்பின்னர் தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாததால் தற்போது பாலிவுட் பக்கம் சென்றுவிட்ட பியா சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவரது கடந்தகால வாழ்க்கை குறித்து பகிர்ந்திருந்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “நான் 10 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத் துறையில் உள்ளேன். சினிமாவுக்காக நான் வீட்டை விட்டு மும்பை வந்தபோது எனக்கு வயது 15 தான்.

மும்பைக்கு வந்தபோது எனக்கு தங்க இடம் கிடைக்கவில்லை. அந்த சமயத்தில் அந்தேரியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் ஒருவர் இடம் இல்லாததால் அவர் தனது நாயை வைத்திருக்கும் மிகச் சிறிய அறையில் அட்ஜஸ்ட செய்துகொள்ள முடியுமா என்று என்னிடம் கேட்டார்.

நானும் வேறு வழியில்லாததால் அந்த நாயுடன் ஒன்பது மாதங்களுக்கும் மேலாக அங்கேயே இருந்தேன். இப்போதெல்லாம் அந்த அறையை விட என் கழிப்பறை கூட பெரியதாகிவிட்டது. ஆனால் எல்லாப் போராட்டத்துக்குப் பிறகும் நிச்சயம் நல்லது நடக்கும் என்று எனக்குத் தெரியும்” என கூறியுள்ளார்.

Leave a Comment