
துக்ளக் குருமூர்த்தி சென்னை மயிலாப்பூரில் உள்ள வரதராஜபுரத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் 3 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் கையில் ஒரு பை இருந்தது. அப்போது நாய் குரைத்தது. எனவே, காவலுக்கு இருந்த போலீஸ் அதிகாரி மணிகண்டன் அந்த மர்ம நபர்களை பிடிக்க முயன்றார். ஆனால், அவர்கள் தப்பி விட்டனர். பெட்ரோல் குண்டுகள் எதுவும் வீசப்படவில்லை.
இது தொடர்பாக தந்தை பெரியார் கழகத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இது தொடர்பான சிசிடிவி வீடியோவையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.
துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீச முயன்ற வழக்கில் 4 பேர் கைது. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தமிழ், ஜனா, சசி, பாபு ஆகியோர் கைது @chennaipolice_ தகவல் @News18TamilNadu @sgurumurthy pic.twitter.com/FHYLDrpNaa
— Mahalingam Ponnusamy (@mahajournalist) January 27, 2020