Connect with us

Cinema News

எங்க செல்லம் கீர்த்தி சுரேஷை என்னயா பண்ணி வச்சிருக்கீங்க.?! பதைபதைக்க வைத்த ‘அந்த’ வீடியோ..,

ஒரு புதுமுக இயக்குனருக்கு முதல் படம் கிடைப்பது கடினம். அப்படியே கிடைத்தாலும் அந்த படம்  ரிலீஸ் ஆகி, அது நன்றாக ஓடினால் தான் அடுத்த பட வாய்ப்பு கிடைக்கும். இப்படி ஒரு நிலைமை இருக்க, ஒரு இயக்குனருக்கு முதல் இரண்டு படமே கிட்டத்தட்ட ரிலீஸ் ஆகாத நிலை, ஆனால், 3 வது படம் பெரிய ஹீரோ அதுவும் பான் இந்தியா படம் என்றால் நம்ப முடிகிறதா?

அந்த ஆச்சர்யம் தான் இயக்குனர் அருண் மாதேஸ்வரனுக்கு நடந்துள்ளளது. முதல் படம் ராக்கி, அது ரிலீசுக்கு முன்பே இயக்குனர் செல்வராகவன், கீர்த்தி சுரேஷை முக்கிய வேடத்தில் வைத்து ஒரு படம் அது ரிலீஸாவதற்கு முன்பே தனுஷ் உடன் பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா திரைப்படம் எடுக்க தயாராகி விட்டார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.

முதல் படம் ராக்கி படம் கொடுத்த மிரட்சி அடங்குவதற்குள் இரண்டாம் படம் சாணி காயிதம் ட்ரைலரை காட்டி அதிரவைத்துள்ளார் அருண் மாதேஸ்வரன். இந்த படம் அமேசான் OTT  தளத்தில் வெளியாக உள்ளது. மே மாதம் 6ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்களேன் – 23 வருஷம் கழித்து ஓர் பிளாக் பஸ்டர் கூட்டணி.! சூப்பர் ஸ்டாரின் அடுத்த ஹிட் இதோ வருகிறது.!

இப்படத்தின் ட்ரைலர் வெளியானது. இதில் இயக்குனர் செல்வராகவன் , கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து கொலை செய்து வருகின்றனர். அதுவும், கீர்த்தி பேசும்வசனமும், அவரது காட்சிகளும் கீர்த்தி சுரேஷ் ரசிகர்களையே கொலை நடுங்க வைத்துள்ளது. ரத்தம் தெறிக்க தெறிக்க நடித்துள்ளார். படத்தை பார்க்க இப்போதே ஆர்வம் அதிகமாக ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top