Cinema History
படம் தோல்வி அடைஞ்சா அதுக்கு நான் எப்படி காரணமாக முடியும்? அன்றே தில்லாகக் கேட்ட அஜீத்…!
இன்று (மே 1) நம்ம தல அஜீத்துக்கு பிறந்தநாள். மே தினத்தைக் கொண்டாடாதவர்கள் இருக்க முடியாது. ஏனென்றால் அது உழைப்பாளிகள் தினம். தொழிலாளர்கள் தினம். இந்தத் தினத்தில் தான் அஜீத் பிறந்துள்ளார். அதனால் அவரது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இனி அவரது சினிமா உலக அனுபவங்களை அவரே எப்படி பகிர்கிறார் என்று பாருங்கள்.
ஸ்கூல்ல படிக்கும்போது படிப்பு ஏறல. ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் கத்துக்கணும். சொந்த ஒர்க்ஷாப் ஓபன் பண்ணனும். பைக் கார் பயங்கர இன்ட்ரஸ்ட் இருந்துச்சு. பேமிலி மெம்பர்ஸ்க்கு பிடிக்கல.
அப்புறம் கார்மண்ட் கம்பெனில மெர்ச்சண்டைசரா சேர்ந்தேன். சினிமா வந்தது டோட்டலி ஆக்சிடண்ட். என்னைக்காவது நான் சொந்தமா கம்பெனி வச்சி எக்ஸ்போர்ட் பண்ணுவேங்கற நம்பிக்கை இருக்கு. வெய்ட் அண்ட் சீ…
ஆசை படம், காதல் கோட்டை பட வெற்றிக்கு காரணமே டைரக்டர்ஸ் தான். அவங்க தான் கேப்டன்ஷிப். 1996ல வான்மதி, கல்லூரி வாசல், காதல் கோட்டை படங்கள்லா கதை கேட்காம தான் நான் அந்தப் படங்கள்ல நடிக்க சம்மதிச்சேன். சினிமாவைப் பொருத்தவரைக்கும் நான் வந்து ஒரு நடிகன். கதை கேட்டு டைரக்டர்கிட்ட கரெக்ஷன் சொல்ற அளவுக்கு அறிவு இருந்தா நான் வந்து ஒரு நடிகனா வந்துருக்க மாட்டேன்.
ஒரு படம் சக்சஸ் ஆனா மட்டும் அந்தப்படத்துக்கு டைரக்டர் காரணம்னு சொல்றீங்க. ப்ளாப் ஆனா நடிகரை சொல்றீங்க. இது தவறு. ப்ளாப் ஆக காரணமும் டைரக்டர் தான்.
2 கோடி செலவு பண்ற புரொடியுசர் அவரு கதை கேட்டு தான ஓகே பண்ணிருப்பாங்க ப்ராஜெக்ட..! 1997ல வந்து உல்லாசம், ராசி, நேசம், ரெட்டை ஜடை வயசு, பகைவன் இந்த 5 படங்களும் கமர்ஷியல் ஹிட் இல்லை.
அதுக்கு வந்து நான் எப்படி காரணமா இருக்க முடியும்.? கதை கேட்கலங்கறது என்னோட பால்ட்னா கதை கேட்டு அப்ரூவ் பண்ணி புரொடியுஸ் பண்ணி ரிலீஸ் பண்ண புரொடியுசருக்கும் அந்த அளவுக்குத் தான் இருக்குன்னா இட் சேம் ரெஸ்பான்சிபிலிட்டிஸ்…சோ மை பால்ட் கிடையாது.
எதிர்பார்த்து தோல்வி அடைந்த படம் உல்லாசம், ராசி.
இந்த பேட்டி தனியார் தொலைக்காட்சிக்காக 2020ல் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தல அஜீத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!