விஜய்டிவி புகழ் பாலாவின் ஒரே ஒரு மீம்ஸ் தான்..! வந்து ஒட்டிக் கொண்டார் பிரபல நடிகை…

Published on: May 6, 2022
bala_main_cine
---Advertisement---

விஜய் டிவியில் காமெடியில் கலக்கிக் கொண்டிருப்பவர் kpy பாலா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்குப் பரீட்சையமானார். அந்த நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டத்தையும் வென்றார். இவரின் காமெடிகள் ரசிக்கும் படியாகவும் எல்லாரையும் லொல் என சிரிக்கும் படியாகவும் இருக்கும். அதற்காகவே இவர் ஏகப்பட்ட ரசிகர்களை தன் கையில் வைத்திருக்கிறார்.

bala1_cine

இவர் இல்லாமல் எந்த ஒரு நிகழ்ச்சியுல் இல்லை எனும் அளவுக்கு விஜய் டிவியில் மிகவும் பிரபலமாகி விட்டார். ஒரு ஷோவை பற்றிய கமெண்ட்களை காமெடி கலந்த உரையாடல் மூலம் சொல்லுவதில் வல்லவரான இவர் அடிக்கடி காமெடி கலந்த பஞ்ச் டைலாக்குகள் மூலம் வெகுவாக அனைவரையும் ஈர்த்து விடுவார்.

bala2_cine

இவர் சொன்ன டைலாக்குகள் பல இணையத்தில் மீம்ஸ்களாக உலாவி வருகின்றன. அதை ரசிகர்களும் ரீல்ஸ்களாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அந்த வகையில் இவர் அண்மையில் கூறிய டைலாக்கில் பிரபல நடிகை ஒருவர் பாலாவை தன்னுடைய இணைய அக்கவுண்டில் இணைத்துள்ளார். அதாவது ”கிட்ஸ் லைக் திரிஷா, மென் லைக் அனுஷ்கா, லெஜென்ஸ் லைக் கீர்த்தி சுரேஷ், அல்ட்ரா லெஜென்ஸ் லைக் பூனம் பாஜ்வா “ என்று தனது இன்ஸ்டாவில் பாலா பதிவிட்டு இருந்தார்.

bala3_cine

அது அப்படியே நடிகை பூனம் பாஜ்வா காதிற்கு செல்ல பூனம் பாஜ்வாவும் தனது இன்ஸ்டாவில் ஏற்கெனவே 2.8 மில்லியன் வியூவ்வர்ஸ் இருக்க தற்போது பாலாவின் பதிவையும் போட்டு சியர் அப் 2.8 அல்ட்ரா லெஜென்ஸ் என பாலாவையும் டாக் செய்துள்ளார். இதை பார்த்து பாலா ஆனந்தத்தில் குதிக்கிறார். என்னையும் மதித்து இப்படி பதிவிட்ட பூனம் பாஜ்வாவிற்கு நன்றி என தெரிவித்து கேரளாவில் ஃபேமஸ் ஓனம், எங்களுக்கு எப்போதுமே தலைவி பூனம் என அப்பொழுதும் ஒரு பதிவை போட்டு பூனம் பாஜ்வாவை நெகிழ்ச்சி படுத்தினார்.

Leave a Comment