Connect with us
sivakarthikeyan

Cinema History

ஏமாற்றி தான் இந்த வாய்ப்பை வாங்குனேன்.! சிவகார்த்திகேயனின் இந்த செயலால் என்ன நடந்தது தெரியுமா.?!

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் முன்னணியில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். இவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட ரஜினி, விஜய்க்கு அடுத்தபடியாக குடும்பங்கள் குழந்தைகள் விரும்பப்படும் நடிகராக மாறிவிட்டார் சிவகார்த்திகேயன் என்றே கூறலாம். குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வரும் காட்சியை இவரது திரைப்படங்களுக்கு நாம் பார்க்கலாம்.

sivakarthikeyan

இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனது முதல் பட அனுபவம் பற்றி கூறியுள்ளார். அதாவது சிவா முதல் பட ஹீரோவாக நடித்து இருந்த மெரினா என்ற திரைப்படத்தில் ஒரு காட்சி உண்டு. அது ஹீரோ பைக்கில் வீலிங் செய்வது போல இருக்கும்.  முதலில் சிவகார்த்திகேயனிடம் இதனைப் பற்றி இயக்குனர் பாண்டிராஜ் கூறிவிட்டாராம்.

அந்த சமயம் சிவகார்த்திகேயனுக்கு வீலிங் செய்வது பற்றி தெரியாதாம். ஒருவேளை தெரியாது என்று உண்மையை கூறினால் தனது வாய்ப்பு பறிபோய்விடுமோ என்ற பயத்தில் எனக்கு நன்றாக தெரியும் என்று சூட்டிங் சென்றுவிட்டாராம் சிவகார்த்திகேயன். அதன்படி காட்சிகள் எடுக்கப்பட்டு வந்துள்ளது. அப்போது பைக் வீலிங் காட்சி எடுக்கப்படும் போது சிவகார்த்திகேயன் பைக் வீலிங் செய்ய ஆன் செய்த போது அது தொடர்ந்து ஆப் ஆகி வந்துள்ளது.

பிறகு புத்திசாலித்தனமாக யோசித்து, சிவா இயக்குனரிடம், ‘ சார் இந்த காட்சியை டூப் வைத்து ஷூட் செய்து, அதனையே ஒரு காட்சியாகவும் மாற்றிவிடலாம் என்று கூறவே, அந்த சமயம் பாண்டிராஜ் கோபப்படாமல் அதுவும் நன்றாகத் தான் இருக்கும் என்று ஒத்துக்கொண்டாராம்.

இதையும் படியுங்களேன் – ஏ.வி.எம், சூப்பர் குட் பிலிம்ஸ் எல்லாம் என்ன பண்றாங்க.! எப்படி இருந்தவர்களுக்கு இப்படி ஓர் நிலைமை.!

பிறகுதான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு டூப் போட்டு ஹீரோயின் முன்னாடி அந்த காட்சி எடுக்கப்படும். பிறகு சிவகார்த்திகேயன் ஓட்டுவதுபோல காண்பிக்கப்படும். அந்த காட்சியும் ரசிகர்களுக்கு பிடித்துப் போனது.

 

இதனை ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை தனக்கு வீலிங் செய்ய தெரியாது என்று சிவகார்த்திகேயன் கூறியிருந்தால், ஒருவேளை இந்த படத்தில் ஹீரோவாக சிவா நடிக்காமல் கூட இருக்கலாம். ஆனால் அன்று அவர் கூறிய சிறிய சமாளிபிகேஷன் இப்போது இவ்வளவு பெரிய இடத்திற்கு கொண்டு வந்துள்ளது.

google news
Continue Reading

More in Cinema History

To Top