பா ரஞ்சித்தின் சல்பேட்டா பரம்பரை ! வில்லனாகும் இயக்குனர் !

Published on: January 28, 2020
---Advertisement---

541fca34ab4a0dfdf3d21b8bb1332616

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கும் அடுத்தப் படமான சல்பேட்டா பரம்பரையில் வில்லனாக இயக்குனர் மகிழ் திருமேனி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

காலா படத்துக்குப் பின் இயக்குனர் பா ரஞ்சித் தலித் போராளி பிர்சா முண்டாவின் வாழ்க்கையை இந்தியில் திரைப்படமாக எடுக்க இருந்தார். மிகப்பெரிய பொருட் செலவில் நமா பிக்சர்ஸ் இந்த படத்தைத் தயாரிக்க இருந்தது. ஆனால் சில பல காரணங்களால் இந்த படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வடசென்னையில் நடந்த உண்மை கதை ஒன்றை மையமாக வைத்து சல்பேட்டா பரம்பரை என்ற படத்தை இயக்க உள்ளார். இதில் ஆர்யா, கலையரசன் மற்றும அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். அதற்காக அவர்கள் அனைவரும் பாக்சிங் கற்றுக் கொண்டு உள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க இயக்குனர் மகிழ்திருமேனி ஒப்பந்தமாகியுள்ளார்.

மகிழ்திருமேனி ஏற்கனவே விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment