
Cinema News
இதுவரை உலக சினிமாவே செய்யாத ஒரு விஷயம்.! தமிழ் சினிமா வேற லெவல் தான்.! 6 வருட காத்திருப்பு..,
Published on
தமிழ் சினிமா இந்தியா சினிமாவில் சமீபத்தில் எந்தவித பாக்ஸ் ஆபிஸ் தாக்கத்தை ஏற்படுத்த தவறி வந்தாலும், புது புது முயற்சிகள் மேற்கொண்ட ரசிகர்களை கவர்வதற்கு முயற்சி மேற்கொள்வதில் எந்தவித குறையும் வைக்கவில்லை. அதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து தான் வருகிறது.
அண்மையில், தான் உலக சினிமா வரலாற்றில் முதன் முறையாக ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட திரைப்படம் என பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் திரைப்படம் கின்னஸ் சாதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது இன்னோர் சம்பவம் தமிழ் சினிமாவில் உருவாகி வருகிறது. பொதுவாக ஒரு ஹீரோ சின்ன வயது கதாபாத்திரம் என்றால் அதனை ஒரு சின்ன வயது நடிகரை கொண்டு எடுத்துவிட்டு, தற்போதைய காலகட்டத்தில் காண்பிக்கும் போது, தற்போதுள்ள ஹீரோவை வைத்து படமாக்கி விடுவர்.
இல்லையென்றால் அந்த ஹீரோவுக்கு கொஞ்சம் மேக்கப் அதிகமாக போட்டு சிறுவயது போல காண்பிப்பார்கள். ஆனால், ஒரு படத்தை 6 வருடத்திற்கு முன்பு அந்த நடிகர்கள் சிறுவயதாகி இருக்கும் போது எடுத்து 6 வருடம் கழித்து இப்பொது எப்படி இருப்பார்களோ அவர்களை வைத்து மீதமுள்ள படத்தை எடுத்து வருகிறார் பெண் இயக்குனர் ஹலிதா ஹமீம்.
இதையும் படியுங்களேன் – ஒரு பனியன் போட்டது குத்தமா.?! ரஜினியை வச்சி செய்து வரும் கமல் ரசிகர்கள்.!
இவர் 2016ஆம் ஆண்டு மின்மினி எனும் படத்தை இயக்கினார். அப்போது, எவ்வளது படமாக்க வேண்டுமோ அதனை எடுத்துவிட்டு, அடுத்ததாக 6 வருடம் கழித்து இப்போது எப்படி இருக்கிறார்களோ அதனை வைத்து, படமாக்க அடுத்த மாதம் ஷூட்டிங் கிளம்புகிறார் ஹலிதா ஹமீம் .
இவர் ஏற்கனவே சில்லு கருப்பட்டி, ஏலே போன்ற படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
6 years ago wrapped the first schedule. The next schedule is from next month… #Minmini pic.twitter.com/wlkScebwGb
— Halitha (@halithashameem) May 10, 2022
ரஜினி கமல் காம்போ : இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். 80-களின் காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க...
Rajasaab: ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம்...
Kantara Chapter 1: கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து 2022ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம்...
str 49 : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரில் ஒருவர் வெற்றிமாறன். இவரின் படங்களில் நடிக்க இந்தியாவின் உள்ள முன்னணி நடிகர்கள்...
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. தனுஷ் இயக்கியுள்ள 4வது திரைப்படம் இது. இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ்,...