கொரானோ வைரஸ் பாதிப்பு : இந்தியாவில் 6 பேர் மீது சந்தேகம் ! தமிழக அரசு நடவடிக்கை என்ன ?

Published on: January 28, 2020
---Advertisement---

1856d4205248c7e2d5fa7840caafafc3-1

சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 6 பேர் மருத்துவமனையில் வைத்துக் கண்காணிக்கப்படுகின்றனர்.

சீனாவைக் கடந்த இரு மாதங்களாக அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ் தாக்குதல். இதுவரி 2700 பேரை தாக்கியுள்ள அந்த வைரஸ் நோய் 106 பேரைப் பலி கொண்டுள்ளது. இதையடுத்து சீனாவுக்கு சென்று வந்தவர்களை கண்காணிக்கும் விதமாக இந்திய விமான நிலையங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுவரையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 6 பேர் இந்நோய் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர்கள் மருத்துவமனையில் வைத்துக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இந்த வைரஸ் தாக்குதலை தடுக்கும் விதமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுபோல கேரளாவிலும் 7 பேர் வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என்று மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment