Entertainment News
அவள் அப்படி ஒரு அழகு… தோழியின் திருமணத்தில் நட்பின் ஆழத்தை பகிர்ந்த ராஷ்மிகா!
திருமணத்தில் கியூட்டான அழகியாக ரசிகர்களை கவர்ந்திழுத்து ராஷ்மிகா மந்தனா!
கியூட் நடிகையான ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக முத்திரை குத்தப்பட்டிருக்கிறார். 2016-ம் ஆண்டு வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
அதையடுத்து தெலுங்கில் “சலோ” என்ற திரைப்படத்தில் நடித்து டோலிவுட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன்பின்னர் வெளிவந்த ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் மெகா ஹிட் அடித்து இவரது மார்க்கெட்டை உச்சத்தில் உயர்த்தியது.
இதையும் படியுங்கள்: ஐயோ அப்படி பாக்காத தோழி!.. க்யூட் லுக்கில் அசரடிக்கும் பிரியங்கா மோகன்…
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் ராஷ்மிகா சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது நெருங்கிய தோழியின் திருமணத்தில் கலந்துக்கொண்டு கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு நட்பின் பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.